அன்பர்களுக்கு வணக்கம்.
திருவண்ணாமலை தீபம் பார்த்தால் மோட்சம் - திருக்கழுக்குன்றம்-Thirukalukundram-பற்றி நினைத்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.இது தமிழ்நாட்டில் எங்கே இருக்கின்றது?
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.பல்லவர்காலத்தில் புகழ்பெற்ற மஹாபலிபுரம்(Mahabalipuram),அணுசக்தி தயாரிக்கும் கல்பாக்கம்(Kalpakkam),புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ள திருப்போரூர் (Thiruporur),மேல்மருவத்துர் (Malmaruvathur)ஆகிய ஊர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. இங்கிருந்து அனைத்து ஊர்களும் 15லிருந்து 20 கிலோமீட்டர் தொலைவுகளில் அமைந்து உள்ளது.கீழே உள்ள குகூள் மேப்பினை பாருங்கள்.(இதில் வட்டமிட்டு காட்டியுள்ளது தான திருக்கழுக்குன்றம்)
சரி...இந்த ஊருக்கு பெயர்வர என்ன காரணம்.?
அதை முதலில தெரிந்துகொள்ளுவோம்.. புராணகாலத்தில் புடா - விருத்தா என்கின்ற இரு முனிவர்கள் இருந்தனர். சிவனால் சபிக்கப்பட்ட இருவரும் கழுகுகளாக மாறினர். பாவ விமோசனம் வேண்டி சிவனை வேண்டினர்.நீங்கள் இருவரும் வேதகிரி மலைக்கு சென்று உங்கள் அலகுகளால் கீறுங்கள். தடாகம் ஒன்று உருவாகும். அதி்ல் குளித்து தினம் என்னை புஜித்து வாருங்கள்.கலியுக முடிவில் நீங்கள் சாப விமோசனம் பெற்று என்னை அடைவீர்கள் என்று கூறி மறைந்தார். அதன்படி இரண்டுபேரும் இரண்டுகழுகுகளாக தினம் இங்கு வந்து சிவனை புஜித்து முக்திஅடைந்தனர். அதனாலேயே இந்த தளத்திற்கு திருக்கழுக்குன்றம் என்று பெயர் வழங்களாயிற்று.இனி ஈசன் அமர்ந்துள்ள மலையை தரிசிக்க செல்லலாம் வாங்க...
526 படிகள் மீது அமர்ந்துள்ள ஈசனை காண முதலில் படியேற தொடங்கவேண்டும்.ஒரு மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை நான்கு நிலைகளை அடைவது போல இங்கு நான்கு நிலைகளில் ்மண்டபம் உள்ளது.முதல் நிலை மண்டபம் குறைந்த அளவே படிகளை உடையது.
அடுத்தது இரண்டாம் மண்டபம்.இதில் உள்ள படிகள் மேற்புற கூரையுடன் காட்சியளிக்கின்றது.
இரண்டாம் மண்டபத்திலிருந்து மூன்றாம் மண்டபம் செல்லும்வழி
மலைஏறும் பாதையி்ல் காணப்படும் வண்ண வண்ண மலர்களுடன் உள்ள மரங்கள் மனதை கொள்ளைகொள்ளும். தாழக்கோயிலின் கோபுரம் .இதுபற்றியும் தனியே காணலாம்.
ஊருக்கு நடுவிலே சங்குதீர்த்த குளம். இதுபற்றிய விளக்கங்கள் தனியே பார்க்கலாம்.
முதலாம் மஹேந்திரவர்மன் கி.பி.610 ஆம் ஆண்டுமுதல் கி.பி.640 ஆம் ஆண்டுவரை இந்த கோயிலை கட்டினான் என்பதற்கு தொல்பொருள்ஆய்வுதுறை அமைத்துள்ள இந்த விளம்பர பலகையே சாட்சி.
ஓரே கல்லில் குடைந்து கட்டப்பட்ட குடைவரைகோயிலின் தோற்றம்.
கழுகுகள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
இந்தப்பாறையின் மீதுதான் தினசரி கழுகுகள் வந்து கோயில் தேசிகர் தரும் சர்க்கரைபொங்கலை சாப்பிட்டுசெல்லும்.
கழுகுகள் தன் அலகால் பாறையில் தேய்க அதனால் வந்த அடையாளங்கள்.
பக்தர்கள் அமர்வதற்காக கட்டியுள்ள மண்டபம். மலைமேல் இருந்து நகரின் எழில்மிகு தோற்றம்.
தாழக்கோயிலின் நான்கு கோபுரங்களும் கோயிலும்.
மலைமேல் உள்ள கோயில் கோபுரம்.
தினசரி இங்கு நான்கு கால புஜைகள் நடைபெறுகின்றது. இங்கு நடைபெறும் இதர புஜைகளை பற்றி அடுத்த பதிவினில காணலாம். சரி இப்போது கழுகுகள் வருகின்றதா? கலியுகம் நெருங்கிவிட்டதா?உலகம் அழிவிற்கும் அதற்கும் சம்பந்தம் உள்ளதா? இந்த கேள்விக்கான விடைகள் அடுத்த பதிவில். பதிவின் நீளம் கருதி இத்துடன்முடித்துக்கொள்கின்றேன். ஓம் நமச்சிவாய......
வாழ்க வளமுடன்.
வேலன்.
16 கருத்துகள்:
மிக்க மகிழ்ச்சி...
வாழ்க வளமுடன்
பதிவை வாசித்ததும் உங்கள் ஊர் கோவிலுக்கு சென்று வந்ததை போல ஆயிற்று.
நல்லதொரு ஆரம்பம் !!
//வேதகிரீஸ்வரர் சுப்ரபாதம்//
பகிர்வுக்கு நன்றி நண்பரே !
சாமி படம் போடலியேன்னு பார்த்தேன்..
சரி விடுங்க
கோபுர தரிசனம் கோடி தரிசனம் என்று நினைத்துக்கொள்கிறேன்..
உண்மையில் இது நல்ல முயற்சிதான்.
பாராட்டுகளும் , வாழ்த்துக்களும் மாப்ள!
ஆஹா ............மாப்ள புனேல இருந்து வந்துட்டார் போல,
ஒரே "பின்னூட்டமா"இருக்கே.
வேலன், இப்போ மனசு குளிர்ந்த போச்சா?
புனே மாப்ள மொதல்ல வந்து ஆரம்பிச்சு வச்சிட்டார் .
இனிமே என்ன ? ஜோரா எழுதுங்க.
பதிவு நிறைய செய்திகளுடன் பிரமாதமாத்தான் இருக்கு.
படங்களும் அழகு. உங்களுக்கு என்ன?
பாராட்டுக்கள்.
இதல்லவோ மனித சேவை
ஹாய், ஒரு நல்ல பணியும் கூட. முதல்ல அதற்கு என் வாழ்த்துக்கள். இந்த கோயில் பற்றிய படங்களும் மேலும் கொடுக்கப் பட்டுள்ள விவரங்களும் அழகா தரமானதா உள்ளது.மேலும் தெரிந்து கொள்ள ஆசையாகவும் இருக்கு. சீக்கிரமாக எழுதுங்கள். இப்படியான உங்கள் முயற்ச்சிக்கு என்னோட பாராட்டுக்கள்.
வாழ்த்துகள் வேலன் சார்,
நல்லதொரு வி்த்தியாசமான சிந்தனையுடன் கூடிய உங்களின் இந்த புதுமையான முயற்சிக்கு வாழ்த்துகள். நிச்சயம் இது ஒரு பயனளிக்கக்கூடிய சிறந்த பணி.
புகைப்படங்கள் அருமையாக உள்ளது.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் வேலன்
ரொம்ப நல்லா இருக்கு , படங்கள் எல்லாம் அருமை சின்ன வயசில போனது சரியா நினைவில்லை கழுகு வந்து சாப்பிடும் காட்சி மட்டும் தான் நினைவில் உள்ளது, அடுத்த முறை சென்னை வரும் போது போக முயற்சி செய்கிறேன்.
சின்ன வயசுல ஸ்கூல் டூர்ல வந்திருக்கேன் . இன்னும் நினைவு இருக்கு படியேறி கால வலித்துதுதான் மிச்சம் கழுகு கடைசி வரை வர வில்லை. ஒரு வேளை அன்னைக்கு அதுக்கு லீவான்னு தெரியல..
இதில எழுதக்கூடியதை தமிழ் விக்கிப்பீடியவில் எழுதினால் உலகம் முழுவதும் பலருக்கும் பயன்படும்.
முகப்பில் பறவை பறப்பது . உங்கள் மதிப்பை இன்னும் உயர்த்துகிறது.. தொடரட்டும் உங்கள் சேவை.!!
படத்தை பார்த்ததும் பழைய நினைவுகளும் வந்து விட்டது..வாழ்த்துக்கள்..!!
வேலன் அண்ணா,
உங்க ஊர் பற்றிய விபரம் மிகவும் சிறப்பாக இருக்கு. படங்கள் எல்லாம் பார்த்தது உங்க ஊரு கோவிலுக்கே வந்த பார்த்த மாதிரி இருக்கு. நகரின் எழிலோவியம் அற்புதம் வாழ்த்துக்கள்.
வேலன் அவர்களே!
அருமையான முயற்சி....!
நல்லவிதமான தொடக்கம்.
இந்தப் பதிவில் குறிப்பிட்டதுள்ளது போல் மற்ற விவரங்களையும் கொடுத்தால் நலமாக இருக்கும்.
மேலும் விவரங்களை விமர்சனத்தையும் தனிமடலில் தருகின்றேன் இரண்டு நாட்களில்.
”அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே” என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது.
அந்த பசுமையான 5 வருடங்களை உங்களின் இந்தப் பதிவு கொண்டு வந்துள்ளது என்றால் அது மிகையாகாது...
நன்றி வேலரே...
என்றென்றும் அன்புடன்,
ஜெயசங்கர்
கருத்துரையிடுக