திருக்கழுக்குன்றம்:-உ.வே.சாமிநாத ஐய்யருக்கு நினைவிடம்.

திருக்கழுக்குன்றம்:-.வே.சாமிநாத ஐய்யருக்கு நினைவிடம்.


திருக்கழுக்குன்றத்தில் உ.வே.சாமிநாத ஐய்யருக்கு நினைவிடம் அமைத்திட அரசுக்கு கோரிக்கை..தமிழுக்காக நிறைய தொண்டாற்றியவர் உ.வே.ஐய்யா அவர்கள். பழைய ஓலைச்சுவடிகளிலிருந்து நூல்களை தொகுத்தவர்.நிறைய நூல்களையும் எழுதிஉள்ளார்.
திருக்கழுக்குன்றம் பற்றியும் நூல்கள் எழுதி உள்ளார். தனது வாழ்நாளில் கடைசி இரண்டுவருடங்கள்திருக்கழுக்குன்றம் சன்னதி தெருவில்உள்ள திருவாவடுதுறை ஆதின மண்டபத்தில் தங்கி நூல்கள் எழுதிவந்தார். கடந்த 28.04.1942 என்று திருக்கழுக்குன்றத்திலேயே இயற்கைஎய்தினார். அவருடைய இல்லத்தினை நினைவு இல்லமாக மாற்றியுள்ளார்கள். இப்போது அவருக்கு நினைவுமண்படம் கட்ட உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (நன்றி தினமணி28.03.2019)கன்னியாகுமரி அல்லது சென்னையில்நினைவுமண்டபம் கட்ட ஆலோசித்து வருகின்றார்கள். அவர் உயிர்நீத்த நமது திருக்கழுக்குன்றத்தில் நினைவு மண்டபம் கட்டினால் நன்றாக இருக்கும். மேலும் திருக்கழுக்குன்றத்தில் நினைவுமண்டபம் கட்டுவதே சாலசிறந்ததாகும். இதன் மூலம் நமது ஊர் பெருமையடையும். சுற்றுலாதலமாகவளர்ச்சியடையும்.சம்பந்தப்பட்டவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல திருக்கழுக்குன்றம் மக்கள் சார்பாக வேண்டுகின்றேன்.நமது ஊர்..நமதுபெருமையை உலகறிய செய்திட பதிவினை (ஷேர்) பகிர்ந்திட வேண்டுகின்றேன்.
வாழ்கவளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-நூற்றாண்டுகளுக்கு முந்தைய அறுபத்திமூவர் திருவிழா புகைப்படங்கள்.

திருக்கழுக்குன்றம்:-நூற்றாண்டுகளுக்கு முந்தைய அறுபத்திமூவர் திருவிழா புகைப்படங்கள்.
#திருக்கழுக்குன்றத்தில் நூற்றாண்டுகளுக்கு முந்தைய 63 -ம் திருவிழா புகைப்படங்கள்..




#வாழ்கவளமுடன்
#வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-#அருள்மிகு #வீரபத்திரருக்கு அமைந்துள்ள கோயில்கள்.

#வீரபத்திரர் பற்றி முதலில் அறிந்துகொள்வோம்;:-
#வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனையருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும்கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர்முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.
வீரபத்திரருக்கு வீரம்” என்பதற்கு அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு காப்பவன்” என்றும் பொருள் கொண்டு வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார்.


#திருக்கழுக்குன்றத்தில் #வீரபத்திரர்:-
திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் மூன்று வீரபத்திரர் கோயில்கள் உள்ளது. அவைகள் எங்கெங்குள்ளன என பார்க்கலாம்.
#திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் கொடிமரம் அருகில் அமைந்துள்ளது. இது சுமார் 10 அடி உயரம் கொண்டது. உயர்ந்த பீடத்தின் மீது நின்றபடி உள்ள வீரபத்திரர் போலவே தஞ்சையிலும் அமைந்துள்ளது.இறைவனுக்கு 10 கரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. தலையில் ஜ்வாலா மகுடம்,காதுகளில் பத்ர குண்டலம்.முகத்தில் தெளிவான புன்னகையுடன் காணப்படுகின்றது.கால்வரை நீண்ட மண்டைஓட்டுமாலை காணப்படுகின்றது.உத்ரபந்தம்.கடிபந்தம் காண்பிக்கப்பட்டுள்ளது.கையில் நீண்ட சூலமும் அதில் பாம்பும் உள்ளது.கால்களில் காப்பு,கழுத்தில் பாம்புமாலை,கைகளில் தடித்த காப்பு காண்பிக்கப்பட்டுள்ளது,இறைவன் முகத்தினை சுற்றி ஒளிவட்டம் காண்பிக்கப்பட்டுள்ளது:.கால் பாதத்தில் சரஸீம் தோளில் லகுவல்யம் வாகுபந்தம்.கையின் மேல் சரஸீம் காணப்படுகின்றது:. வலதுகாலை மேல்நோக்கி இடதுகால் போருக்கு தயாராவதுபோல் உள்ளது.இந்த #வீரபத்திரர் #அகோரவீரபத்திரர் என அழைக்கப்படுகின்றார்..சுமார் 125 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட #அகோரவீரபத்திரர் புகைப்படம் உங்கள் பார்வைக்கு....


#சாந்தசொரூப #வீரபத்திரர்:-
#திருக்கழுக்குன்றம் கிரிவல பாதையில் அடிவாரத்தில் நூலகம் எ;திரில் இந்த கோயில ;அமைந்துள்ளது. #சாந்தசொரூப #வீரபத்தரர் தமிழ்நாட்டில் இங்குமட்டும்தான் உள்ளது என கூறுகின்றார்கள்.மேலும் சுமார் 300 வருடங்களுக்கு மேற்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.சரியான விவரம் கிடைக்கவில்லை..





#ஶ்ரீஅனுக்கிரகவீரபத்திரர்:-
இந்த வீரபத்திரர் கோயிலினை யாவரும் அறிந்து இருக்கமாட்டார்கள். இது மலைவல பாதையில் நால்வர்கோயில் பேட்டையில் நால்வர்கோயில் எதிரில் (சமுதாய கூடம் பக்கத்தில்) அமைந்துள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயமாக இருக்கலாம்.


#வீரபத்திரருக்கு மூன்று ஆலயங்கள் இருப்பது நமதுஊருக்கு பெருமை...
#நமதுஊர்..#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன













பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-#பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ள சுரங்கம்.

#திருக்கழுக்குன்றம்:-#பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ள சுரங்கம்.






#திருககழுக்குன்றம் #பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ளே உள்ள சுரங்கத்தினை இளையவயதினர் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.கடந்த 09.06.1967 வெள்ளிக்கிழமை அன்று தாழக்கோயிலின் உட்பிரகாரத்தின் வடக்குபக்கம் #முருகன் சன்னதிக்கும் 63 நாயன்மார் சிலைகளுக்கும் நடுவில் திருப்பணிக்காக தோண்டும்போது சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.சுரங்கத்தின் உள்ளே சென்று பார்க்கையில் பல செப்புச்சிலைகள் கண்டறியப்பட்டன.#சிவகாமியுடன்#ஆடல்வல்லான்,#ிரதோஷநாயகர்.#பள்ளியறைசாச்சியார்.#பள்ளியறைச்சொக்கன்.#விநாயகர்.#கரைக்கால்அம்மையார் போன்ற சிலைகள் கிடைத்தது.கோயிலின் உள்ளே சுரங்கம் உள்ள பகுதியில் உள்ள ஜன்னலுக்கும் சுவற்றுக்கும் இடையே உள்ள இடைவெளியை பார்த்துக்கொள்ளுங்கள். கோயிலுக்கு வெளியே சென்று (அருணாசலஈஸ்வரர் கோயிலுக்கு எதிரே} சுரங்கம் உள்ள ஜன்னலிலிருந்து சுவற்றுக்கு இடையே உள்ள தூரத்தினை பாருங்கள். உள்ளே உள்ளதைவிட வெளியில் தூரம் அதிகமாக இருக்கும்..சுரங்கத்திலிருந்து மலைக்கு சுரங்கப்பாதை உள்ளது என செவிவழி செய்தியும் உண்டு...அடுத்தமுறை கோயிலுக்கு செல்லும் சமயம் சுரங்கம் இருப்பதை பார்த்துவாருங்கள்.
#நமதுஊர்..#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-2019 #சித்திரை #பெருவிழாஅழைப்பிதழ்

#திருக்கழுக்குன்றம்:-2019 #சித்திரை #பெருவிழாஅழைப்பிதழ்.


#திருக்கழுக்குன்றம் #அருள்மிகு #திருபுரசுந்தரியம்மைஇடங்கொண்ட #அருள்மிகு #வேதகிரீஸ்வரர்திருக்கோயில் 2019 #சித்திரை பெருவிழா வருகின்ற 09.04.2019 செவ்வாய்கிழமை அன்று ஆரம்பித்து 20.04.2019 சனிக்கிழமையும் நிறைவடைகின்றது. உங்கள் அனைவரையும் #செயல்அலுவலர் திரு.ஆ.குமரன் மற்றும் #தக்கார் திரு.ம.சக்திவேல் அவர்கள் சார்பாகவும்.திருக்கோயில் #சிவாச்சாரியர்கள்#பணியாளர்கள்,மற்றும் #திருக்கழுக்குன்றம;#கிராமபொதுமக்கள் சார்பாக வருக வருக என வரவேற்கின்றோம்.#அனைவரும்வருக..#இறைவன்அருள்பெருக...
#நமதுஊர்...#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-சித்திரைத்திருவிழா பத்திரிக்கை.


திருக்கழுக்குன்றம்:-#சித்திரைத்திருவிழா பத்திரிக்கை.








#திருக்கழுக்குன்றம் #சித்திரைத்திருவிழா பல நூற்றாண்டுகளை கடந்து மிக சிறப்பாக நடந்துவருகின்றது.1921 -ம் ஆண்டு நடந்த #திருவிழாவிற்கான பத்திரிக்கை எனக்கு கிடைத்தது. திருவிழா பத்திரிக்கையில் நமது ஊர் பெருமைகளை குறிப்பிட்டபின் திருவிழா நிகழ்ச்சிகளை பட்டியலிட்டுள்ளார்கள்...
#நமதுஊர்..#நமதுபெருமை...
வாழ்கவளமுடன்
#வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.

#திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.





#திருக்கழுக்குன்றம்:-
மலையின் பெயரால் வழங்கப்படும் ஊர்களில் #திருப்பரங்குன்றம் போல் #திருக்கழுக்குன்றம் ஒன்று ஆகும். குன்று இருக்கும் இடங்களில் எல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு மாறாக இங்கு ஈஸ்வரன்எழுந்தருளியுள்ளார். கழு என்றால் சூலம் என பொருள். இங்குள்ள மலையை தூரத்திலிருந்து பார்க்கையில் சூலத்தின் மூன்று முனைகளை போல மலை தோன்றுவதால் கழுக்குன்றம் என பெயர்வந்த்கவும் கூறுவார்கள். கழுகு பூசித்ததால் கழுக்குன்றம் என அழைப்பார்கள்.சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக பெயர்மாறாமல் உள்ள ஊர் என்கின்ற பெருமையுடயது நமது #திருக்கழுக்குன்றம்.

.
#பக்‌ஷிதீர்த்தம்:-
நன்பகலில் பட்சிகள் வந்து உணவு உண்பதால் வடநாட்டவர்களால் #பக்‌ஷீதீர்த்தம் என அழைக்கப்படுகின்றது
.
#வேதகிரி:-
நான்கு வேதங்கள் மலை வடிவெடுத்து இங்குள்ள ஈசனை வழிபட்டதால் இந்த ஊரினை #வேதகிரி என்றும் அழைப்பார்கள்.
"ஆகமுடன் சம்பாதி அனுதினமும் வந்துதொழும் நாகபரன் வேதகிரி " என்றும்
அட்டதிக்கும் வேதகிரி என்றும் புராணச்செய்திகள் தெரிவிக்கின்றன..
#உருத்திரகோடி சேத்திரம்:-
உலகிற்கு துன்பம் அளித்த அரக்கர்களைக் கொன்று உருத்திர் இங்கு வந்து இறைவனை வழிபட்டு நற்பெயர் பெற்றதால் #உருத்திரகோடி சேத்திரம் என நமது ஊர் அழைக்கப்படுகின்றது
.
#நந்திபுரி:-
நந்திதேவர் வந்து வழிபட்டு உய்தி பெற்றதால் #நந்திபுரி என அழைக்கப்படுகின்றது.

இந்திரன் இங்கே வந்து தொழுத்ல் #இந்திரபுரி என அழைக்கப்படுகின்றது. இங்கு இந்திரன்வந்து சிவனை அபிஷேகம் செய்வது இடிஅபிஷேகம் என அழைக்கப்படுகின்றது.
தேவர்களுக்கு பகைவர்களான அரக்கர்கள் ஒருமுறை பிருகு முனிவரிடன் அடைக்கலம் புகுந்தனர்.பிருகு முனிவர் இல்லாத சமயத்தில் வந்த விஷணு பிருகு முனிவரின் மனைவியிடம ;அரக்கர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூற சினம் கொண்ட விஷ்ணு அனைவரையும் அழித்து முனிவரின் மனைவியையும் ஆசிரமத்துடன் எரித்துவிட்டார். இதை அறிந்த பிருகு முனிவர் விஷ்ணுவிற்கு சாபம் அளித்தார்.பெண்ணை கொன்ற பாவம ;நீங்க வேதகிரிக்கு வந்து இறைவனை நோக்கி தவம் செய்யும்படி பிருகுமுனிவர் கூற அதன்படி விஷ்ணுவும் தவம்செய்து பாவம் நீங்கபெற்றார். விஷ்ணு வழிபட்ட இந்த தலம் #நாராயணபுரம் என பெயர்பெற்றது.
சாவித்திரி.சரஸ்வதி என்கின்ற இரண்டு மனைவியருள் பிரம்மன் சரஸ்வதியிடம் மட்டும் மிகுந்த ஆசையுடையவனாக இருந்த்த கண்ட சாவித்திரி வேதங்கள் உம்மைவிட்டு நீங்கட்டும் என சபித்தாள்.அதற்கேற்ப மது.கைடபர் என்னும் இராட்சதர்களிடம் நான்முகனாகிய பிரம்மா சிக்கி துன்பத்திற்கு ஆளானார். அப்போது திருமால் பிரம்மன் முன்பாக வந்து #வேதமலை மீது வீற்றிருக்கும் #வேதகிரி நாதரை வழிபட உமது சாபம் நீங்கும் என்றார். நான்முகனும் அவ்வாறே பூஜிக்க இறைவன் அருளால் சாபம் நீங்கியதுடன் வேதங்களுடன் சாவித்திரியையும் அழைத்துக்கொண்டு பிரம்பலோகம் சென்றார்.எனவே நமது ஊர் #பிரம்புரி என்றும ;அழைக்கப்படுகின்றது.
சூரியனாகிய தினகரன் இங்கே சிவனை வழிபட்டதால் #தினகாபுரி என அழைக்கப்படுகின்றது;.
பாணினியின் வியாகரணத்தைக் கேட்டு தெளிவு பெறாத சில முனிவர்தான் தெளிவு பெற இந்த ஊரினை அடைந்து இறைவனை தொழுது தெளிவுபெற்றதால் #முனிகணபுரி என அழைக்கப்படுகின்றது:
.
#உலகலந்தசோழபுரம்:-
முதலாம் இராசேந்திரன் காலந்தொட்டு #திருக்கழுக்குன்றம் என்கின்ற பெயருடன் #உலகலந்தசோழபுரம் என்கின்ற பெயரும் வழங்கிவந்துள்ளது;.

#திருக்கழுக்குன்றநாயனார்.#திருக்கழுக்குன்றமுடையார்#திருமலையாளுடைய தேவர்,#மலைமேல் முலத்தானத்துப் பெருமானடிகள்.#திருமலை மேல உடையார்.#ஶ்ரீமூலஸ்தானத்து தேசவிடங்க தேவர் போன்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.
இதுதவிர #சிவபுரம்,#கதலிவனம்,#கழுகாசலம்.#கங்காசலம்.#உருத்திரகிரி.#மறைக்காடு.#வேதபொற்றை.#சுருதிமலை.#திருமலை,#வேதநாராயணபுரம் போன்ற பெயர்களால் நமது ஊர் அழைக்கப்படுகின்றது. எனக்கு கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளேன்..இதுதவிர வேறுபெயர்கள் இருந்தால் தெரிவிக்கவும். இணைத்துக்கொள்கின்றேன்..
நமது ஊர்..நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
#திருக்கழுக்குன்றம்.#வேலன்.#thirukazhukundram.#velan.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்