திருக்கழுக்குன்றம்:-ரோப்கார் .




திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு சாலைவசதி வேண்டும் என நாளிதழில் செய்தி வந்தது.வயதானவர்கள் -உடல் ஊனமுற்றவர்கள் இறைவனை காணவேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் இருக்கும் மலையை அழித்து மரங்களை வெட்டி அவ்வாறான சாலை வசதி அவசியமா? அவசியம் வாகன வசதி வேண்டும் என்றால் ரோப் கார் வசதி கொண்டுவரலாமே...
ரோப் கார் வசதிக்காக குறைந்த அளவே இடம் தேவைப்படும்.
தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுற்றுலா விடுதியிலிருந்து மலைமீது உள்ள குடிநீர் தொடடி அமைந்துள்ள இடம்வரையில் செல்லும் வரை பாதை அமைக்கலாம்.(மலைக்கோயிலுக்கு செல்ல முந்தைய காலத்தில் இந்த வழிதடத்தில் படிக்கெட்டு இருந்துள்ளது.)
ரோப்கார் வசதி மூலம் கோயில் நிர்வாகத்திற்கு அதிகஅளவில் வருமானம் வரும்.
மலைமீது கோயில் ;திறந்திருக்கும் நேரம் ரோப்கார் நிலையம் திறந்து கோயில் நடை சாத்தியதும் ரோப்கார் நிலையத்தினை மூடிவிடலாம்.
சுற்றுச்சூழல் பாதிப்படையாது.முக்கியமாக மரங்கள் மூலிகை வனம் காக்கப்படும்.
தமிழ்நாட்டில் பழனிகோயிலுக்கு அடுத்து நமது கோயில் ரோப் கார் மூலம் பிரபலமடையும்.
ரோப்காரில் பயணிக்கவே சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள்.
மலைமீது சாலை அமைத்தால் ஏற்படும் விபத்துக்கள் அதிகம் ஏற்படும்.#ரோப் கார் பயன்படுத்துவது மூலம் விபத்துகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.
கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது..இறைவனை காண கஷ்டப்படடுதான் படி ஏற வேண்டும்
நவீன போக்குவரத்து வசதிகள் கட்டாயம் தேவையில்லை..
நவீன வசதிகள் கட்டாயம் கொண்டுவரவேண்டும் என அரசு நினைத்தால் ரோப் கார் வசதியை கொண்டுவருவது பற்றி யோசிக்கலாமே..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக