திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.

திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.
#திருக்கழுக்குன்றம்:-
மலையின் பெயரால் வழங்கப்படும் ஊர்களில் திருப்பரங்குன்றம் போல் திருக்கழுக்குன்றம் ஒன்று ஆகும். குன்று இருக்கும் இடங்களில் எல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு மாறாக இங்கு ஈஸ்வரன்எழுந்தருளியுள்ளார். கழு என்றால் சூலம் என பொருள். இங்குள்ள மலையை தூரத்திலிருந்து பார்க்கையில் சூலத்தின் மூன்று முனைகளை போல மலை தோன்றுவதால் கழுக்குன்றம் என பெயர்வந்த்கவும் கூறுவார்கள். கழுகு பூசித்ததால் கழுக்குன்றம் என அழைப்பார்கள்.சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக பெயர்மாறாமல் உள்ள ஊர் என்கின்ற பெருமையுடயது நமது #திருக்கழுக்குன்றம்.
நண்பகலில் பட்சிகள் வந்து உணவு உண்பதால் வடநாட்டவர்களால் #பக்‌ஷீதீர்த்தம் என அழைக்கப்படுகின்றது

.
நான்கு வேதங்கள் மலை வடிவெடுத்து இங்குள்ள ஈசனை வழிபட்டதால் இந்த ஊரினை #வேதகிரி என்றும் அழைப்பார்கள்.
"ஆகமுடன் சம்பாதி அனுதினமும் வந்துதொழும் நாகபரன் வேதகிரி " என்றும்
அட்டதிக்கும் வேதகிரி என்றும் புராணச்செய்திகள் தெரிவிக்கின்றன..
உருத்திரகோடி சேத்திரம்:-
உலகிற்கு துன்பம் அளித்த அரக்கர்களைக் கொன்று உருத்திர் இங்கு வந்து இறைவனை வழிபட்டு நற்பெயர் பெற்றதால் #உருத்திரகோடி சேத்திரம் என நமது ஊர் அழைக்கப்படுகின்றது
.
நந்திதேவர் வந்து வழிபட்டு உய்தி பெற்றதால் #நந்திபுரி என அழைக்கப்படுகின்றது.

இந்திரன் இங்கே வந்து தொழுத்ல் #இந்திரபுரி என அழைக்கப்படுகின்றது. இங்கு இந்திரன்வந்து சிவனை அபிஷேகம் செய்வது இடிஅபிஷேகம் என அழைக்கப்படுகின்றது.

தேவர்களுக்கு பகைவர்களான அரக்கர்கள் ஒருமுறை பிருகு முனிவரிடன் அடைக்கலம் புகுந்தனர்.பிருகு முனிவர் இல்லாத சமயத்தில் வந்த விஷணு பிருகு முனிவரின் மனைவியிடம ;அரக்கர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூற சினம் கொண்ட விஷ்ணு அனைவரையும் அழித்து முனிவரின் மனைவியையும் ஆசிரமத்துடன் எரித்துவிட்டார். இதை அறிந்த பிருகு முனிவர் விஷ்ணுவிற்கு சாபம் அளித்தார்.பெண்ணை கொன்ற பாவம ;நீங்க வேதகிரிக்கு வந்து இறைவனை நோக்கி தவம் செய்யும்படி பிருகுமுனிவர் கூற அதன்படி விஷ்ணுவும் தவம்செய்து பாவம் நீங்கபெற்றார். விஷ்ணு வழிபட்ட இந்த தலம் #நாராயணபுரம் என பெயர்பெற்றது.

சாவித்திரி.சரஸ்வதி என்கின்ற இரண்டு மனைவியருள் பிரம்மன் சரஸ்வதியிடம் மட்டும் மிகுந்த ஆசையுடையவனாக இருந்த்த கண்ட சாவித்திரி வேதங்கள் உம்மைவிட்டு நீங்கட்டும் என சபித்தாள்.அதற்கேற்ப மது.கைடபர் என்னும் இராட்சதர்களிடம் நான்முகனாகிய பிரம்மா சிக்கி துன்பத்திற்கு ஆளானார். அப்போது திருமால் பிரம்மன் முன்பாக வந்து #வேதமலை மீது வீற்றிருக்கும் #வேதகிரி நாதரை வழிபட உமது சாபம் நீங்கும் என்றார். நான்முகனும் அவ்வாறே பூஜிக்க இறைவன் அருளால் சாபம் நீங்கியதுடன் வேதங்களுடன் சாவித்திரியையும் அழைத்துக்கொண்டு பிரம்பலோகம் சென்றார்.எனவே நமது ஊர் #பிரம்புரி என்றும ;அழைக்கப்படுகின்றது.
சூரியனாகிய தினகரன் இங்கே சிவனை வழிபட்டதால் #தினகாபுரி என அழைக்கப்படுகின்றது;.
பாணினியின் வியாகரணத்தைக் கேட்டு தெளிவு பெறாத சில முனிவர்தான் தெளிவு பெற இந்த ஊரினை அடைந்து இறைவனை தொழுது தெளிவுபெற்றதால் #முனிகணபுரி என அழைக்கப்படுகின்றது:
.
முதலாம் இராசேந்திரன் காலந்தொட்டு #திருக்கழுக்குன்றம் என்கின்ற பெயருடன் #உலகலந்த சோழபுரம் என்கின்ற பெயரும் வழங்கிவந்துள்ளது;.
#திருக்கழுக்குன்றநாயனார்.#திருக்கழுக்குன்றமுடையார்#திருமலையாளுடைய தேவர்,#மலைமேல் முலத்தானத்துப் பெருமானடிகள்.#திருமலை மேல உடையார்.#ஶ்ரீமூலஸ்தானத்து தேசவிடங்க தேவர் போன்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.
இதுதவிர #சிவபுரம்,#கதலிவனம்,#கழுகாசலம்.#கங்காசலம்.#உருத்திரகிரி.#மறைக்காடு.#வேதபொற்றை.#சுருதிமலை.#திருமலை,#வேதநாராயணபுரம் போன்ற பெயர்களால் நமது ஊர் அழைக்கப்படுகின்றது. எனக்கு கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளேன்..இதுதவிர வேறுபெயர்கள் இருந்தால் தெரிவிக்கவும். இணைத்துக்கொள்கின்றேன்..
நமது ஊர்..நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
#திருக்கழுக்குன்றம்.#வேலன்.#thirukazhukundram.#velan.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக