திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றத்தின் சிறப்புகள்-தொகுப்பு -1




குழந்தைவரம் இன்றி #திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரருக்கு நோன்பிருந்து பிறந்த குழந்தை #மறைமலை அடிகள் அவர்கள்.
15.07.1876 அன்று பிறந்து இன்றுடன் 144 வருடங்களாகின்றது.அவரின் வாழ்க்கை வரலாற்றில் வந்துள்ள தகவல்கள் உங்கள் பார்வைக்கு....
தொண்டர் திகழ்வது “#தொண்டநாடு”..
சான்றோரை உடையது #தொண்டநாடு-#ஓளவையார்..
#திருவள்ளுவர் –#சேக்கிழார் இருவரும் #தொண்டை நாட்டினரே…
தொண்டநாட்டின் சிறப்பு தலம் “#திருக்கழுக்குன்றம்
அறம்-பொருள்-இன்பம்-வீடு என்னும் நான்மறைப்பொருளைஅன்பர்களுக்கு நினைவூட்டும் “#வேதமலை” இங்கு உள்ளது.
மாணிக்கவாசகர் இறைவன் திருவடிகளை வைத்துகுருபீடம் அமைத்த திருவடி தலம் “#திருக்கழுக்குன்றம்”.
சிவபெருமானுக்கு மலையுச்சியில் அமைந்த திருக்கோயில்#திருக்கழுக்குன்றத்தினைதவிர தமிழகத்தில் வேறுஎங்கும் இல்லை..
#திருக்கயிலாயம் –#திருக்கழுக்குன்றம் இவை இரண்டில்#வேதமலை என்னும் சிறப்புடையது “#திருக்கழுக்குன்றமே”…
தனிப்பெருமைக்குரிய முதல்வனை போல #திருக்கழுக்குன்றம்தமிழ்த்தொண்டு நாட்டில் தனிச்சிறப்புக்குரியதாக உள்ளது.
அழகிய காட்சிகளை உடைய இயற்கைத்தலம்.
பார்வதியை காதலிக்கும் சிவபெருமான் மற்றோர்இடத்தினையும்காதலிக்கின்றாரேன்றால் அது “#திருக்கழுக்குன்றமே”…
சமயகுரவர் நால்வர் பதிகங்களையும் உடையது “#திருக்கழுக்குன்றமே”!
தொண்டநாட்டில் நால்வர் பாடலும் பெற்ற தலம் #திருக்கழுக்குன்றம் தவிரவேறு இல்லை..
ஆண்டவன் தலம் –நோன்புதலம் –மருந்துதலம் என அழைக்கப்படுவது #திருக்கழுக்குன்றமே
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக