திருக்கழுக்குன்றம்:-நவகிரககோயில்.


பழமையான புகழ்பெற்ற #சிவன்கோயில்களில் நவகிரகங்கள் இருப்பதில்லை.அதுபோல நமது ஊரிலும் மலைமீது அமைந்துள்ள #வேதகிரீஸ்வரர்கோயிலிலும்.#தாழக்கோயிலிலும்.#உருத்திரர்கோயிலிலும் நவகிரக சன்னதி இல்லை.நவகிரகங்களுக்கு பதில் மலைவலப்பாதையில் எட்டு திசைகளிலும் நந்திகள் உள்ளது;நமக்கு வரும் சங்கடங்கள் #வேதகிரீஸ்வரரே பார்த்துக்கொள்வார் என்பதால் தனியே நவகிரக சன்னதி அமைக்கவில்லை.

1952 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரகடம் பகுதியை சேர்த்த பெண்மணி ஒருவரால் இப்போதைய நவகிரகக்கோயில் கிரிவலப்பாதைக்கு வெளியில் முதலில் அமைக்கப்பட்டது. இப்போது இராஜலிங்கேஸ்வரர் கோயில்.கோதுமைகொல்லைதெரு முத்துமாரி அம்மன் கோயிலிலும்.மின்சார வாரியம் அலுவலகம் அருகில் ஒன்றும்.ருத்திரான்கோயிலில் காளிகோயிலிலும்.முத்திகை நல்லான் குப்பத்திலும் நவகிரககங்களுக்கு கோயில் அமைந்துள்ளது.(வேறு எங்காவது அமைந்திருந்தால் சொல்லுங்கள் கணக்கில் சேர்த்துக்கொள்கின்றேன்) முதலில் அமைந்த நவகிரககோயிலும் அதற்கான கல்வெட்டும் உங்கள் பார்வைக்கு..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக