திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.

திருக்கழுக்குன்றம் வட்டம் மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.

பழங்கால பெரிய சிவன்கோயில் (திருக்கழுக்குன்றம்)சுற்றி எட்டு சிறிய சிவன்கோயில்கள் அமைந்திருக்கும். அவற்றைகண்டுபிடித்து பதிவிடுங்கள் என சென்னை நண்பர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி கண்டுபிடித்து பதிவிட்ட முதல் சிவன்கோயில் இது...பதிவுகள் தொடரும்..

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டிலிருந்து  திருக்கழுக்குன்றம் வழியாக திருப்போரூர் செல்லும் சாலையில் மானாம்பதி என்கின்ற ஊர் அமைந்துள்ளது. 

சிவபெருமான் அம்பாளுடன் வந்து வேடனாக மான்மீது அம்பு எய்திய காரணத்தினால் மான்அம்பு எய்திய பதி என்கின்ற பெயர் மருவி மானாம்பதி என அழைக்கலாயிற்று என்று செவிவழி செய்தி உள்ளது.

கல்வெட்டில் உள்ள தகவல்கள்:-

முதலாம் பராந்தக சோழன் ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள இந்த 

கோயிலுக்கு இராட்டிடக்கூடன் மூன்றாம் கிருஷ்ணன் கி.பி.967 –ல் 

விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான். முதலாம் இராஜராஜன் 

இக்கோயில் திருப்பணி செய்து பராமரித்துள்ளான்.கி.பி. 990 ல் 

கனகாட்டூர் திருக்காபுர தேவர்க்கு வழிபாடு.விளக்கெரிக்க 

நிலமளிக்கப்பட்ட செய்தியும்கி.பி.993ல்  கனகாட்டூர் ஊரார் நிலம் 

விற்பனை செய்த விவரமும் குறிப்பிடபட்டுள்ளன. அத்துடன் 

திருவகத்தீஸ்வரர் சாத்தன் கோயில் குறிப்பும் திருக்காபுர தேவன் 

என்ற வரி கல்வெட்டும் இத்துடன் உள்ளது.திருக்கழுக்குன்றம் 

பேரூராகவும் இந்த ஊர் சிற்றுராகவும் இருந்திருக்கலாம். கி.பி.993 ஆம் 

ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் பிடாரி மற்றும் சாஸ்தா கோயில்கள் 

குறிப்பிடபட்டுள்ளன கி.பி.999 ல் அகத்தீஸ்வரர் கோயில் குறிப்பும் 

உள்ளது.கி.பி.1125 ல் விக்கிரமன் இக்கோயிலுக்கு நிலம் விற்பனை 

செய்துள்ளதை தெரிவித்துள்ளான்.கோப்பிருஞ்சிங்கன்ஆட்சியில் 

திருக்கரபுர கணக்கன் நந்தா விளக்கெரிக்க கி.பி.1257 ல் ஏற்பாடு 

செய்துள்ளான்.கி.பி.1345 ஆம்ஆண்டில் இராஜநாராயண சம்புராயன் 

இக்கோயிலை பழுதுபார்த்து வழிபாடுகள் தொடர வானமாதேவி 

கிராமத்தையும் திருக்கழுக்குன்றத்து ¼  பகுதி நிலங்களையும் 

இறைநீக்கி தேவதானமாக்கியுள்ளான்.வழிபாடு தொடர்பாக 

கைக்கோளர்களுக்கும் வணிகர்களுக்கும் தகராறு செய்து 

கொண்டதால் முதலாம் வேங்கடனின் முகவர் செஞ்சமநாயக்கன் 

நேரில் விசாரித்து உடையவர்.பெருமாள். பிள்ளையார் கோயில் 

நிர்வாகத்தில் வணிகர்கள் தலையிலாமல்  இருக்க ஆணை 

பிறப்பித்துள்ளான்.கி.பி 1610 ஆம் ஆண்டு இந்த ஊரில் நடைபெறும் 

புதன்கிழமை வார சந்தையில் வசூலிக்கப்படும்  அல்லாயம் வரியை  

செல்வவினாயகர் கோயில் வழிபாட்டுக்காக வையப்ப நாயக்கருக்கு 

வழங்கப்பட்டுள்ளது கல்வெட்டுமூலம் தெரியவருகின்றது,.பசவதேவ 

மகாராஜவும் திம்மு நாயக்கனும் வீட்டு மனைகளை வழிபாட்டுக்கு 

வழங்கியுள்ளனர். வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 16 

கல்வெட்டுக்கள்  இக்கோயிலில் அடையாளமிடப்பட்டுள்ளன.

பல்லவர் காலத்தை சேர்த்த சூரியன் சிற்பமும் சூலதாரி என்கின்ற 

சூலத்தேவர் சிற்பமும்.துர்கை சிற்பமும் உள்ளது.

கோயிலில் உள்ள  சம்புவராயர் கல்வெட்டு திருக்கழுக்குன்றப்பற்று 

வானவன்மாதேவி  என இந்த ஊரினை குறிப்பிடுவதால் .முதலாம் 

இராஜேந்திரன் ஆட்சியில் இவ்வூரின்அடுத்துள்ள அகரம் என்கின்ற 

கிராமத்தில் 4000 பிராமணர்களை குடியமர்த்தி வானவன்மாதேவி 

சதுர் மங்கலம் என பெயரிடப்பட்டுள்ளது.அகரத்தின் ஒருபகுதியாக 

களக்காட்டூர் இருந்துள்ளது. பிராமணர்கள் வசித்த பகுதி அகரம் 

எனவும்பிறபகுதிகள்சதுர்வேதமங்கலம்என்றும் அழைக்கப்

பட்டுள்ளது.

 தகவல்:-காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு என்கின்ற நூலிலிருந்து...

ஆலயம் பற்றிய தகவல்கள்:-

செங்கல்பட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்கழுக்கன்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது.கோயிலில் நுழையும் முன்னனே தற்போதைய தற்கொலைப்படை போலவே அந்த காலத்தில் இருந்துள்ளது. கோயிலுக்கோ நாட்டுக்கோ சேதம் வரும் சமயம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தற்கொலை செய்து கொள்ளும் தற்கொலை படை வீரர்கள் சிலைகள் அமைந்துள்ளது. ஊர் மக்கள் இதனை வழிபட்டுவருகின்றனர். 

கோயிலில் நுழைந்ததும் கொடிமரம் நம்மளை வரவேற்கின்றது. கோயிலின் இடதுபுறம் வினாயகர் சன்னதி உள்ளது. வினாகயர் அம்மாளுடன் ஞானசக்தி வினாயகராக  காட்சியளிக்கின்றார். 

கோயிலின் கருவரையில் சிவபெருமான் திருக்கரைஈஸ்வரராக நமக்கு காட்சியளிக்கின்றார்.

கருவரையை சுற்றி வருகையில் முதலில் சூரியன் சிலை உள்ளது. இது பல்லவர்காலத்தை சேர்ந்தது. இதுபோல சூலதாரி என்கின்ற சூலத்தேவர் சிற்பமும் தூர்கைஅம்மன் சிற்பமும் பல்லவர்காலத்தினை சார்ந்தது.

சூரியன் சிற்பம்:-

சூலத்தாரி என்கின்ற சூலத்தேவர் சிலை:-

தூர்கையம்மன் சிலை:-

நால்வர் சிலை:-

இங்கு யோகபைரவர் மற்றும் கால பைரவர் என அருகருகே இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது இந்த தலத்தின் சிறப்பாக உள்ளது.
இந்த கோயிலின் கருவரை கஜபிருஷ்ட அமைப்பில் அமைந்துள்ளது. கஜபிருஷ்ட அமைப்பின் மூலம் பிரபஞ்ச சக்தியை தக்க வைக்க முடியும் என முன்னோர்கள் கணித்து வைத்துள்ளார்கள். சோழர்கால கோயில்களில் இந்த கஜபிருஷ்ட அமைப்பினை காணலாம்.திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயிலும் இவ்வாறான  அமைப்பினை கொண்டது.

கோயிலின் பின்புறம் குளம் ஒன்று அமைந்துள்ளது. கருவரையின் நிழல் இந்த குளத்தில் தெரிவது தளத்தின் மற்றுமொரு விஷேஷமாக கருதப்படுகின்றது.இந்த குளத்தில் 48 நாட்கள் குளித்து வந்தால் நாள்பட்ட சரும நோய்கள் குணமாவதாக குறிப்பிடுகின்றார்கள்.

கோயிலின் பின்புறம் கன்னிமார்கள் சிலை அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர் சன்னதியும் அமைந்துள்ளது. 
இங்கு அம்மன் சன்னதி தனியாக உள்ளது. பாடலாம்பிகை என்கின்ற பெயருடன் அம்மன்அருள்பாளிக்கின்றார்.



கோயிலின் சிறப்புகள்:-
குரல்வளம் சம்பந்தபட்ட திக்குவாய் உள்ளவர்கள்.தைராய்டால்  பாதிக்கப்பட்டவர்கள்.இக்கோயிலில் அபிஷேகம் செய்து தரப்படுகின்ற தேன் உள்ளுக்கு அருந்தியும் விபூதியை பூசி வந்தால் நாளடைவில் சரியாகின்றது.அதுபோல ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இங்கு தரப்படும் திருநீறை பூசிகொண்டு சிறிது அளவு எடுத்து நீரில் கரைத்து அருந்திவந்தால் ஆஸ்துமா நோய் குணமாகின்றது.
ஐப்பசி மாதம் நடைபெறுகின்ற சூரசம்ஹாரம் முடிந்து முருகனுக்கு அணிவிக்கப்படும் திருக்கல்யாண மாலையை கல்யாணமாகமல் இருப்பவர்களுக்கு அணிவித்தால் அவர்களுக்கும் விரைவில் திருமணமாகிவிடுகின்றது.
இரண்டு பைரவர்கள் அருகருகே அமைந்துள்ளது.
பல்வவர் கால சூரியன்.சூலத்தேவர் சிலை  மற்றும் துர்கை அம்மன் சிலைகள் அமைந்துள்ளது.
கருவரை கஜபிருஷ்ட அமைப்பு கொண்டது.
கிரகணத்தின்போது ஏற்படும் தோஷம் இந்த ஆலயத்திற்கு வந்தால் நிவர்த்தியாகும்.
கருவரையின் நிழல் குளத்தில் விழுவது ஆலயத்தின் சிறப்பாகும்.


திரு.எம்.எம்.குமாரசாமி முதலியார்

இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும் -இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்கின்ற பாடலுக்கு ஏற்ப அறங்காவலாராக சிறப்பாக பணியாற்றியவர் திரு.குமாரசாமி முதலியார். திருக்கழுக்குன்றத்தில் அவர் அறங்காவலாக இருந்தசமயத்தில் செய்த பணிகள் ஏராளம். திருக்கழுக்குன்றம் பற்றிய  நூல்களை எழுதியுள்ளார். அவர்கள் வம்ச வழிவந்தவர்கள் புகைப்படங்கள் கோயிலில் வைத்துள்ளார்கள்அவர்வழி வந்த வாரிசுகள் தற்போது இந்த மானாம்பதி தீர்த்தகரைஈஸ்வரர் கோயிலினை சிறப்பாக பராமரித்து வருகின்றார்கள்.
.கோயில் பூஜை சம்பந்தமாக தொடர்புகொள்ள
 திரு.திருமணி அவர்கள்..போன்:-9791017692.
நேரம் கிடைக்கும் சமயம் இறைவனை சென்று தரிசித்து வாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக