#திருக்கழுக்குன்றம்:-வழுவதூர் ஶ்ரீஅக்னிபுரிஸ்வரர்.
#திருக்கழுக்குன்றத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது #வழுவதூர் கிராமம். #திருக்கழுக்குன்றத்திலிருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆலயம் இது.முன்னர் காலத்தில் #வைவழுவாதூர் என அழைக்கப்பட்ட ஊர் பெயர் மருவி தற்போது #வழுவதூர் என அழைக்கப்படுகின்றது.அதுபோல அங்கு அமைந்துள்ள சிவபெருமானுக்கு #திருவக்னீஸ்வரர் என்கின்ற பெயர் மருவி #ஸ்ரீஅக்னிபுரிஸ்வரர் என அழைக்கப்படுகின்றது. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கோயில் இது.
கருவரையில் #ஸ்ரீஅக்னிபுரிஸ்வரர் சிலை அமைந்துள்ளது.சிவன் கோயில்களில இருக்கும் துவார பாலகர்களின் பெயர் சண்டன்.பிரசண்டன்.கருவரையின் வாயிலில் சண்டன் பிரசண்டன் சிலைகள் காவல் தெய்வங்களாக உள்ளனர். துவார பாலகர்களின் சிலை இரண்டு விதங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஓன்று சங்கு சக்கர கதாயுதத்துடன் ஆயத பாணிகளாக துவார பாலகர்கள் காட்சி தருவார்கள்.இன்னொன்று ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக தன்னுடைய ஆட்காட்டி விரலை உயர்த்தியபடி ஒரு துவாரபாலகர் நிற்பார். இறைவன் ஒருவனே என்பதுதான் இதன் தத்துவம்.இன்னோரு துவார பாலகர் தன்னுடைய கையை விரித்தபடி இருப்பார். இறைவனை தவிர வேறுஏதும் இல்லை என்பது இதன் தத்துவம்.இங்குள்ள துவார பாலகர்கள் சங்கு சக்ர ஆயுதங்களுடன் அமைந்துள்ளது.
கருவரையை நோக்கியவாறு #சிவசூரியன் மற்றும் #சிவசந்திரன் சிலைகள் உள்ளது.
கோயிலினை சுற்றி வருகையில் #நால்வர் சிலைகள் உள்ளது.
ஆலயத்தில் #ஸ்ரீகல்யாண வினாயகர் கோயில் அமைந்துள்ளது. வினாயகரை அடுத்து #ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் சிலை தனிஆலயமாக அமைந்துள்ளது. அதனை அடுத்து #ஸ்ரீமகாலட்சுமி ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயங்களுக்கு பின்னர் தனியாக #ஸ்ரீசங்கமேஸ்வரர் என்கின்ற சிவாலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயங்களை கடந்து வருகையில தனியாக #ஸ்ரீசௌந்திரநாயகி அம்மாள் சன்னதி அமைந்துள்ளது. கருவரை வாயிலில் ஹரப்ரதா மற்றும் சுபத்ரா சிலைகள் உள்ளன. (சிவன் பெருமாள் கோயில்களில் துவார பாலகர்கள் என்றும் அம்மன்கோயில்களில் முகப்பில் இருப்பவர்கள் துவார பாலகிகள் என்றும் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அம்மன் கோயிலில் உள்ள துவார பாலகிகள் பெயர் ஹரபத்ரா மற்றும் சுபத்ரா)#ஸ்ரீசௌந்திர நாயகி அம்பாள் நின்ற கோலத்தில் நமக்கு காட்சியளிக்கின்றார்.
அவரை வணங்கி வலம்வருகையில் கடைசியாக #ஸ்ரீகாசிகால பைரவர் சிலை உள்ளது.
கோயிலின் அருகில் இரண்டு குளங்கள் அமைந்துள்ளது. குளக்கரையில் இருந்து பார்க்கையில் #திருக்கழுக்குன்றம் #ஸ்ரீவேதகிரீஸ்வரரர் மலையை தரிசிக்கலாம்.
இங்கு உள்ள சிவபெருமான் வழக்குகளை தீர்த்துவைப்பதால் நிண்ட நாட்களாக வழக்கு வாய்தா என கோர்ட் கையுமாக அலைபவர்கள் இங்குள்ள சிவபெருமானை வணங்கி தங்கள் குறைகளை எழுதி மனுவாக வைத்து வணங்கினால் விரைவில் வழக்கில் வெற்றி கிடைக்கும் என்று சொல்கின்றார்கள். அதுபோல சொத்து பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையுள்ளவர்களுக்கும் இந்த ஈஸ்வரர் உதவிபுரிகின்றார்.(உங்கள் கோரிக்கை நியாயமானதாக இருந்தால் உங்கள் ஆசை நிறைவேறும். அடுத்தவர் சொத்துக்கு நீ்ங்கள் ஆசைப்பட்டால் உங்கள் ஆசை நிறைவேறாது)
இங்குள்ள #ஸ்ரீசௌந்திரநாயகி அம்மனை தீபமேற்றி வணங்கி வந்தால் திருமண வயது கடந்து திருமணமாகாமல் இருப்பவர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெறுவதாக சொல்கின்றார்கள்.
ஒரு முறை #திருக்கழுக்குன்றத்தில் வசித்த ஒரு பெண் சில வீடுகளில் வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவளது கணவன் அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தான். ஆனால் அந்தத் தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு பணம் கொடுத்த பின்னரும் கூட வட்டி கொடுத்தவர்கள் அந்தப் பெண்ணின் கணவனை துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் அந்தப் பகுதியைச் சேர்ந்த வழக்காடு மன்றத்தில் புகார் அளித்தாள்.ஆனால் வழக்கை விசாரித்தவர்கள் பணம் இருந்தவர்களின்பக்கம் நின்றனர். இதனால் அந்தப் பெண்ணுக்கும் அவளது கணவனுக்கும் நீதி கிடைக்கவில்லை. திக்கற்று நிற்பவர்களுக்கு தெய்வத்தைத் தவிரவேறு என்ன துணை இருக்கிறது. அதனால் அந்தப் பெண் இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டாள். இறைவனிடம் தன்னுடைய நிலையை கூறி அழுது புலம்பினாள். அவள் இறைவனை சந்தித்து முறையிடுவது தினசரி வாடிக்கையாகிப் போனது. அவள் தொடர்ச்சியாக 5-வது திங்கட் கிழமையாக வந்து வழிபட்டுக் கொண்டிருந்தாள்.
அன்றைய தினம் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய இறைவன் ‘கலங்காதே! நீ மீண்டும் அதே வழக்காடு மன்றத்தில் போய் புகார் கொடு. வெற்றி உன் பக்கம் வந்து சேரும். தைரியமாகப் போ’ என்று சொல்லி மறைந்தார்.
#வழக்காடியஇறைவன் :
அதன்படியே அந்தப் பெண்ணும் மீண்டும் புகார் கொடுத்தாள். வழக்கை விசாரிப்பதற்காக அனைவரும் கூடியிருந்தனர். அப்போது #இறைவன் வழக்காடுபவர் வடிவில் அந்த மன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது தவறு செய்தவர்களான வட்டி வசூலிப்பாளர்களால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. அவர்கள் அனல் மேல் நிற்பது போல் துடிதுடித்தனர். அங்கிருந்து எழுந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து #இறைவன் அந்த மன்றத்தில் தன்னுடைய தரப்பு வாதத்தை வைத்து அந்தப் பெண்ணுக்கு நீதி வாங்கிக் கொடுத்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த ஊர் பெரியவர்கள் ‘உங்களை இதற்கு முன்பு நாங்கள் இங்கே பார்த்ததில்லையே.. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டனர்.அதற்கு #இறைவன் ‘நான் யார் என்று தெரிய வேண்டும் என்றால் இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள ஆலயத்திற்கு வாருங்கள்’ என்று கூறினார்.ஊர் பெரியவர்களும் ஊர் மக்களும் புகார் கொடுத்த பெண் உள்ளிட்ட அனைவரும் வாதாட வந்தவருடன் சென்றனர். ஆலயம் வந்ததும் #இறைவன் அக்னி பிழம்பாக மாறி நின்றார். இதையடுத்து வழக்காட வந்தவர் #இறைவன் என்பதை உணர்ந்த அனைவரும் ஆச்சரியத்துடன் உள்ள மகிழ்வுடனும் #இறைவனின் சன்னிதி முன்பாக விழுந்து வணங்கினர். ஆனாலும் அக்னி பிழம்பாய் நின்ற #இறைவனின் வெப்பம் அனைவரையும் வாட்டியது. உடனடியாக அவற்றை தன் சக்தியால் #இறைவன் குளிர்வித்தார். அக்னி பிழம்பாக #இறைவன் நின்றதால் ‘#அக்னிபுரீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.
இந்த ஆலயத்திற்கு வந்து, இத்தல #இறைவனையும், #இறைவியையும் வழிபட்டால் மனதளவில் உள்ள பிரச்சினைகளும், குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் விலகும். மேலும் நீதிமன்ற வழக்கு களில் இருந்தும் விடுபடலாம். வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய இத்தல #இறைவன் அருள்புரிகிறார். இங்குள்ள #இறைவனை 5 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக வழிபடுவதுடன், நெய் தீபம் ஏற்றி, வில்வ இலை அர்ச்சனை செய்தால் நற்பலன்கள் கிடைக்கப்பெறும். அம்பாளுக்கு பவுர்ணமியன்று மாலையில் தீபமிட்டு வழிபட்டால் மனம் போல் மண வாழ்க்கை அமையும்.
புதர்களின் நடுவே சிதிலமடைந்து இருந்த கோயிலினை ஊர் மக்கள் சேர்ந்து புனரமைத்து வழிபாட்டுக்கு உகந்ததாக மாற்றிஉள்ளார்கள்.அமைதியான சூழலில் மனதிற்கு ஆத்ம திருப்தியை ஆலயம் தருகின்றது.
ஆலய தொடர்புக்கு இரண்டு தொலைபேசி எண்களை கொடுத்துள்ளார்கள்.
திரு.முருகேசன்:-9952432615 திரு.ரவி:-9360636805
அர்ச்சகர் திரு.வேதகிரி :-9944504002.
#வாழ்கவளமுடன்
#வேலன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக