திருக்கழுக்குன்றம்:-போரில் சிதிலமடைந்த சிலை.

#திருக்கழுக்குன்றம்:-போரில் சிதிலமடைந்த சிலை.

 முகலாயர் படையெடுத்து அனைத்து கோயில்களையும் கொள்ளையடித்தனர்- பல கோயில்கள் இடித்தனர் என நாம் வரலாற்று பாடத்தில் படித்திருக்கின்றோம் முகலாயர் தாக்குதலில் நமது #திருக்கழுக்குன்றம் கோயிலும் தப்பவில்லை. அவர்கள் #பக்தவச்சலேசுவர் கோயில் நுழைவாயிலில் உள்ள #துவாரபாலகர் சிலையை இடிக்க துவங்கினர். அவ்வாறு அவர்கள் இடித்ததில் #துவாரபாலகர் சிலையின் கால் சேதமடைந்திருப்பதினை நீங்கள் கோயிலுக்கு செல்லும் சமயம் பார்க்கலாம். (புகைப்படத்தினை உங்கள் பார்வைக்கு இணணத்துள்ளேன்)





அப்போது அந்த முகலாய படைத்தளபதி #நடராஜர் சன்னதி முன் உள்ள சிற்பம் ஒன்றை கண்டு இடிப்பதை உடனே நிறுத்துமாறு தனது படைகளுக்கு கட்டளையிட்டுள்ளான்.

இந்த கோயிலில் நமது முன்னோர்கள் படை வீரராக உள்ளனர். எனவே கோயிலினை இடிக்க வேண்டாம் என முடிவெடுத்து திரும்பினர். முன்னதாக முகலாய படை யெடுப்புக்கு பயந்து அங்கங்கே கோயில் சிலைகளை சுரங்கங்களில் மறைத்து வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. நமது ஊரில் உள்ள சுரங்கத்தில் இருந்து எடுத்த சிலைகளும் அப்போது புதைத்து வைத்த சிலைகளாக இருக்கலாம் என்றும் துவரபாலகர் குறித்து தகவலும் செவிவழி செய்தியாக உள்ளது.
#துவரபாலகர் சிலை- முகலாய தளபதி கண்ட படை வீரர் சிலை -புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
சுரங்கம் பற்றிய முந்தைய பதிவினை காண :-https://www.facebook.com/groups/249272441772691/permalink/2490262771006969/

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக