திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.


#திருக்கழுக்குன்றம்:-#திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.


கடந்த காலத்தில் #தனக்கோட்டி செட்டியார் –மங்கையற்கரசி என்னும் தம்பதியர் பல தான தருமங்கள் செய்து சீறும் சிறப்புடனும் வாழ்ந்துவந்தனர். அநேக தான தருமங்களை செய்தும் புண்ணிய தலங்கள் பல சென்றும் அவர்களுக்கு குழந்தைபாக்கியம் இல்லை. குழந்தை இல்லாத குறையை எண்ணி தனக்கோட்டி-மங்கையற்கரசி தம்பதியர் வருந்துகையில் சாட்சாத் #வேதகிரி பெருமான் சிவனடியார் திருவுருக்கொண்டு அவர்கள் இல்லம் சென்றார். வணிகர் பத்தினியோடு அவரை எதிர்கொண்டழைத்து வந்து தக்க ஆசனமளித்து அமரச்செய்து திருவடிக் கமலங்களுக்கு சுகந்த நீராட்டி கலவைச் சாந்தீட்டு நறுமலராலர்ச்சித்து சுவாமி இக்குடிசையில் திருவமுது செய்து அடியார்கள் எங்கள் குறையை நீக்கிட வேண்டுமென பிராத்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து வேண்டி நிற்க பெருமான் மனமிரங்கி நீங்கள் #வேதகிரிமலையை ஒரு மண்டலம் விதிப்படி கிரிவலம் வர புத்திரபேறு உண்டாகுமென திருவாய்மலர்ந்து மறைந்தார்.
அதன்படியோ இருவரும் விதிப்படி ஒரு மண்டலம் 48 நாட்கள் #சங்குதீர்தத்தில் புனிதநீராடி #வேதகிரி மலையை கிரிவலம் வந்து முடிவில் #வேதகிரிஸ்வரருக்கும் #திரிபுரசுந்தரி அம்மனுக்கும் விஷேஷ அலங்கார உத்ஸவாதிகள் செய்து வைத்து
அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்கள் இல்லம் சென்று உறங்கினர். காலையில் குழந்தை அழுகுரல் கேட்டு துயில் எழுகையில் பரமேஸ்வரியே குழந்தை உருவாய் தம்பக்கத்தில் இருக்க கண்டு ஆனந்தம் பொங்கி இருகரங்களாலேந்தி உச்சி மோந்து கொஞ்சி மகிழ்ந்தனர். வேத ஆகமச் சடங்குகள் செய்து என்ன பெயர் வைக்கலாம் என யோசிக்கையில் அசரீரியாய் #சொக்கம்மாள் என்னும் திருநாமஞ்சூட்டு என கேட்ட அனைவரும் ஆனந்தமடைந்தனர். அன்னதானம்.சொர்ணதானம் என 32 தானங்களும் அவரவர் விருப்பபடி வேண்டிய அளவு கொடுத்து குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்த்து வந்தார்கள்.அப்படி வளர்ந்து வந்த அம்மையாருக்கு பன்னிரண்டு வயது ஆனதும் தங்குல முதியோர் பந்துக்கள் சேர்ந்து நல்ல தினத்தில் திருமணம் முடிக்க ஆலோசனை செய்தனர்.அப்போது சொக்கம்மன் தனது தந்தையாரை நோக்கி #வேதமலையை வலம்வந்து பிறகு தான் திருமணம்பற்றி முடிவெடிக்கவேண்டும் என கூற அதன்படியே #வேதமலையை வலம்வர முடிவு செய்தனர்.அதன்படி வணிகர்கோன் திருமலைச்சொக்காமெனும் திருத்தேவியரை அழைத்துக்கொண்டு #திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள #சங்குதீர்த்தத்தில் நீராடி #வேதமலையை வலம்வரும்போது தந்தையார் முன்னும் அம்மையார் பின்னுமாக மலையை வலம்வரத்தொடங்கினர். மலைக்கு வடக்குத்திசையில் பிரதஷணமாகப்போகும்போது மலை அடியில் ஒரு பாறை மீது #வேதகிரிப்பெருமான் அமர்ந்திருப்பது அம்மையார் கண்ணுக்குமட்டும்தெரிய அம்மையார் அடையுமிடம் வந்ததை உணர்ந்து பெருமானிடம் நெருங்கிட #வேதகிரிப் பெருமான் தேவியை அழைத்துக்கொண்டு மலைமீது ஒரு சார்பில் தங்கவும்.முன்னம் சென்ற செட்டியார் திரும்பி பார்த்து குழந்தையை காணாது திகைத்து மயங்கி முன்னும் பின்னும் ஒடி ஒடி தேடியும் காணாமல் ஒவேன கதறிய வண்ணமாக #திருமலைச்சொக்கம்மாள் என்று பலமுறை கூவி அழைக்க மலைமீது ஏன் ஏன் என்னும் குரல் கேட்க திசையறிந்து மலை மீதேறி பார்க்க சுவாமி முன்னும் அம்மையார் பின்னும் நிற்பதறிந்து ஓவென கதறிய வண்ணம் மெய் சோர்ந்து அடியற்ற மரம்போல சுவாமி பாதத்தில் விழுந்து கதற – இறைவன் அவர் முன் தோன்றி அன்பரே வருந்தவேண்டாம். உம்முடைய அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்துவந்தாள். இனி உன்னுடன் வரமாட்டாள். வேண்டிய வரம்கேள் என கேட்டார். அதற்கு செட்டியார் சுவாமி தங்களை அடைந்தும் அகில உலக மாதாவையே மகளாக பெற்றும் நான் அடைந்ததைக் காட்டிலும் வேறு பேறு எனக்கு என்னவேண்டும்.ஆயினும் சுவாமிகள் அம்மையாரோடு இவ்விடத்திலேயே இருந்திடல்வேண்டும். உங்களை வந்தடைந்து தரிசனம் செய்யும் அன்பர்களுக்கு #புத்திரபேறு,#மாங்கல்யபேறு.#செல்வப்பேறு.#பிணிநீக்கம் என்று அவரவர் கோரியபடி வரத்தை அருளவேண்டும் என வேண்டுகோள் விடுக்க அதன்படியே #வேதகிரிஸ்வரர் வரம் அருளி தன்னை #வேதகிரி மலைமீது வந்து பார்க்க என்று அருளிச்செய்தார். வணிகர்கோன் அக்கட்டளையை சிரமேற்றாங்கி #வேதமலை உச்சியிலே சென்று பார்க்க அங்கும் அம்மையாரோடு காட்சியளிக்க கண்ட தனக்கோட்டி செட்டியார் பேரானந்தம் கொண்டவராய் சுவாமி அப்பனே! #வேதகிரி பெருமானே! அம்மையாரை விட்டு நீங்காச் செல்வம் வேண்டுமெனப் பிராத்திற்க.பெருமான் அம்மையார் சன்னிதானத்திலே இருக்க மோட்சமளித்தார். வணிகர்கோன் விதேக முக்கியடைந்தார்.(#வேதகிரீஸ்வரர் மலைமீது #வேதகிரியை தரிசத்து வலம்வருகையில் #சொக்கம்மன் சன்னதி முன் இருகரம் கூப்பிய படி #தனக்கோட்டி செட்டியார் சிலை இருப்பதை காணலாம்)


அம்மையாரை வளர்த்த மங்கற்கரசியாருக்கும் பெருமாள் சாயுச்சிய பதவியளித்தார். அகில உலக மாதாவை மகளாகப் பெற்ற இருவரும் பெரும் பதவியும். புகழும் உலகம் உள்ளளவும்பெற்றார்கள். அந்த நாள் முதல் ஈசன் #வேதகிரிப்பெருமான் கொடுத்த வரத்தின் வாக்குப்படி #வேதமலையின் மேல் வடக்கு திசையில் #திருமலைச் #சொக்கம்மன் ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது. #வேதகிரி ஈஸ்வரர் தேவியரோடு சேர்த்த சுபதினமான பங்குனி உத்திர சுபவேளையில் மேற்சொன்ன வணிகர் குல பரம்பரையார் அம்மனுக்கு #மஹா அபிஷேகமும் #திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.
சென்ற நூற்றாண்டில் #திருமலையில் பட்சிகளுக்கு அமுதூட்டிய பரம்பரையில் வந்த திரு.வேதப்ப முதலியார் –திரு.சமரபுரி முதலியார்-திரு.பழனி முதலியார் –திரு.மலைமருந்து முதலியார் – திரு.வீராசாமி முதலியார் –திரு.ராஜேந்திரன் முதலியார் என வம்சாவழி வம்சத்தினர் தற்போது திருமலை சொக்கம்மன் ஆலய பூஜை செய்து வருகின்றனர்

அலங்காரத்தில் திருமலைச் சொக்கம்மாள்.

திருமலைச்சொக்கம்மாள் கோயிலின் பல்வேறு தோற்றங்கள்:-









#வேதகிரி மலையை #கிரிவலம்வருகையில் சிறிய மலைமீது அமைந்துள்ள #திருமலை #சொக்கம்மன் ஆலயத்தினையும் தவறாமல் தரிசித்து வாருங்கள்.
#நமதுஊர்..#நமதுபெருமை
#வாழ்கவளமுடன்
#வேலன்.
தகவல்:-திருமலைச்சொக்க நாயகி அம்மாள் சரித்திர சுருக்கம் என்கின்ற நூலிலிருந்து.


 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக