திருக்கழுக்குன்றம்:-யாழி(யாளி) சிற்பங்கள்.



திருக்கழுக்குன்றம்:-யாழி(யாளி) சிற்பங்கள்.
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?
* யாழி தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சித்திரசிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள்அமைக்கபெற்றுள்ளது.
* சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.
* நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருப்பது போல் சிலைஅமைப்புகள் உள்ளன .
அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா ?
* இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.நமது #திருக்கழுக்குன்றம் கோயிலில் சோமஸ்கந்தர் ஆலய பக்கவாட்டுபடிக்கட்டுக்களிலும்.
                                      
சங்குதீர்த்த குளத்தின் நடுவே அமைந்துள்ள நீராழி மண்டபத்தில் அமைந்துள்ளன.நீராழி மண்டபத்தின் மேலே ஏற படிக்கட்டுக்கள் அமைந்துள்ளன.
அந்த நான்கு வழி படிக்கட்டுக்களின் இருபுறமும் இவ்வகை யாழிகள் அமைக்கப்பட்டுள்ளன. #திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள யாழிகள் படம் உங்கள் பார்வைக்கு..யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட .சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...தமிழரின் புராதன விலங்கு யா‌ழி அவை போற்றப்பட வேண்டும் மேலும் புகழப்பட்ட வேண்டும் தகவல்:-கூகுள்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக