திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.

#திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல #டோலி.
#திருக்கழுக்குன்றத்தில் மறைந்துவிட்ட பொருளில் -நிகழ்வில் -#டோலியும் ஒன்று. அந்த காலத்தில் #வேதகிரீஸ்வரர் மலை மேல் செல்ல வயதானவர்கள்-மலை ஏற முடியாதவர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் #டோலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிய கட்டிலில் ( பாளை கயிறு மற்றும் ஜனப்பிரி கயிறில் கட்டப்பட்ட கட்டில்) ஆளை உட்கார வைத்து இரண்டு புறமும் கயிறினை கட்டி நீண்ட கொம்பினை அதில் நுழைத்து தோட்டில் போல் மலைமேலே இரண்டு நபர்கள் தூக்கி செல்வார்கள்.மாற்று ஏற்பாட்டுக்கு உடன் இரண்டு நபர்கள் செல்வார்கள். இதுபோல நிர்வாகத்தில் 10 டோலிகள் இருந்தது. சுமார் 20 பேருக்கு மேல் வேலை செய்து வந்தார்கள். டோலிக்கு கட்டணமாக நிர்வாகத்திற்கு 20 ரூபாயும் டோலி வாடகை 30 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. தூக்கி செல்லும் ஆட்களுக்கு தாலா 35 ரூபாய் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் அது மொத்தம் 200 ரூபாயாக மாறியது.ஒரு நபரை தூக்கி செல்பவர்கள் கீழே இருந்து(அடிவாரத்திலிருந்து) நேட்டு படி வரையிலும் சென்று விட்டுவிடுவர். அங்கிருந்து இருவர் அவர்களை மலைமேலே கொண்டு செல்வார்கள். வரும் தொகையை மொத்தமாக பங்கு போட்டுக்கொள்வார்கள்.1991 வரை இருந்த இந்த வசதி பின்னர் காணாமல் சென்று விட்டது.#நோபாள மன்னர் நமது #திருக்கழுக்குன்றம் மலைமேலே செல்ல டோலியை பயன்படுத்தினார். அவரை டோலியில் தூக்கிசெல்லும்காட்சிஇணைக்கப்பட்டுள்ளது.

பட்சி தரிசனத்திற்காக காத்திருக்கின்றார்கள்.
திருக்கழுக்குன்றத்தின் எழில் மிகு தோற்றம்.

இன்றைய இளைய தலைமுறையினர் இவ்வாறுதான் கொண்டுசென்றிருப்பார்கள் என புகைப்படம்மூலம்எளிதில்அறிந்துகொள்ளலாம்.
#நமதுஊர்..#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக