வேலன்:-லட்சதீப திருவிழா -திருக்கழுக்குன்றம்.


இலட்ச தீபத்திற்கு முன்னர் உடனடியாக முடிக்க வேண்டிய பணிகள்:-

1. மலைவலப் பாதையில் திருவடி பூங்கா முதல் இராஜலிங்கேஸ்வரர் கோயில் வரை உள்ள கிரிவல பாதையில் சிறு கற்களை அகற்றி தார் ரோடு போடவேண்டும். 
2. கிரி வல பாதையில் திருவடி பூங்கா மற்றும் நால்வர்கோயில் பேட்டை பள்ளி அருகில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும்.
3. கிரி வல பாதையில் உள்ள நந்தி மண்டபங்களை சுற்றி வருமாறு வசதி செய்து தரவேண்டும்.
4. கிரி வல பாதையில் தெருவிளக்கும்.குடிநீர் வசதியும் நிரந்தரமாக ஏற்படுத்தி தரவேண்டும்.
5.இந்த முறை லட்சதீபத்திற்கு ஐந்து லட்சதிற்கும்  மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்ப பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதி மறறும் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும்.
6.கும்பகோணத்தில் மகாமகத்தில் செய்தவாறு தீர்த்தவாரியில் குளிக்கும் நிகழ்ச்சியை ஒருநாளில் இல்லாமல் ஒருவாரத்திற்கு குளத்தில் நீராடலாம் என்றும் ;அதற்கான வசதியை செய்துதரலாம். இதனால் ஒரே நாளில் ஏற்பாடும் கூட்டநெரிசலை தவிர்க்கலாம்.
7.சங்கு தீர்த்த குளத்திற்கு அருகில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் திறந்தவெளியில் இல்லாமல் தீர்த்தவாரி மண்டபம் கட்டவேண்டும். இதனால் தீர்த்தவாரிக்கு வரும் சுவாமிசிலைகள் மழையிலும் வெய்யிலிலும் இருக்கவேண்டிய நிலைவராது.
8.சங்கு தீர்த்த குளத்தில் உள்ள காரிய மண்டபத்தில்- குளத்தில் குளிப்பவர்கள் உடை மாற்ற அறை ஏற்படுத்தி தரவேண்டும்.
9.லட்சதீப விழா பற்றி பத்திரிக்கைகளிலும் டிவிகளிலும் இணையதளம் வாட்ச்அப்.பேஸ்புக் மூலமாகவும் விளம்பரம் செய்யவேண்டும்
10.பொதிகை மற்றும் தனியார் தொலைகாட்சிகளிலும் லட்சதீப விழாவினை நேரடியாக வர்ணனை செய்திட வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
11. சிறு மழைக்கே தாழக்கோயிலில் உள்ள அம்மன் சிலைஅருகில் மழைநீர் வந்துவிடுகின்றது. அதற்கான உள்ள வடிகால் வசதியை தொல்பொருள் அலுவலர் மூலம் கண்டுபிடித்து சரிசெய்துவிட வேண்டும்.
12.தாழக்கோயில் உள்ள ஆமை மண்படத்தினை சுற்றி பூந்தோட்டம் அமைக்கலாம்.
உங்களுக்கான ஏதாவது ஆலோசனை ஏதும் இருப்பின் தெரிவிக்கவும். இந்த பகுதியில் வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாம்.
வாழ்க வளமுடன்
வேலன்.

கடந்த முறை நடைபெற்ற லட்சதீப திருவிழாவின் இரண்டாவது பாகத்தின் வீடியோ தொகுப்பு கீழே:-

வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-திருக்கழுக்குன்றம் லட்சதீப விழா...


திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள லட்ச தீப தகவல்களும்.திருக்கழுக்குன்றம் பற்றிய தகவல்களும் இந்த இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடபடும். இலட்ச தீபத்திற்காக நானே உருவாக்கிய டிசைன் கீழே கொடுத்துள்ளேன்.
இதற்கு முன்னர் 2004 ஆம் வருடம் 18.08.2004மற்றும் 19.08.2004 அன்று நடைபெற்ற  லட்சதீப விழாவிற்கான வீடியோவினை 26.05.2010 அன்றே யூடியூப்பில் வீடியோவாக பதிவேற்றம் செய்துவிட்டேன். அதன்   வீடியோ  தொகுப்பு கீழே:-
 
தொடர்ந்து லட்சதீப திருவிழா பற்றிய தகவல்களையும் திருக்கழுக்குன்றம் ஊர் பெருமையையும் தகவல்களாக வெளியிடுகின்றேன்.உங்கள் அன்பினையும் ஆதரவையும் வேண்டி...
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்