திருக்கழுக்குன்றம் :-முத்திகைநல்லாங்குப்பம் பெயர்வர காரணம்.

திருக்கழுக்குன்றம் :-முத்திகைநல்லாங்குப்பம் பெயர்வர காரணம்.
பழைய காலத்தில் #திருக்கழுக்குன்றத்தில்அதிகாரம்பெரும்பாலும்உருத்திரகணிகையரிடம் இருந்ததென்றும் #நாச்சிமுத்து இங்கே முத்தி பெற்ற உரிமையினால் இந்நிலையை அவர்கள் பெற்றிருநதனரென்றும் சிலர் கூறுவர்.ஆறு கணிகையர் தலைமை வகித்தரென்றும் அவர்களுக்கு ஆறவட்டதாரென்னும் பெயர் வழங்கிவந்தனர். அவர்களில் ஒருத்தி முத்திநல்லாளென்றும் அவள் பெயரால் முத்தி நல்லாள் ஷேத்திரம என வழங்கியதை அறியமுடிகின்றது:சரி #நாச்சிமுத்து என்பவர் யார். அவர் எப்படி முத்தி அடைந்தாள்?அதனை பார்க்கலாம்.
நாச்சி முத்து முக்தி பெற்ற வரலாறு:-
#திருக்கழுக்குன்றத்து #வேதகிரீஸ்வர அடியார்க்கு நல்லார் என்பது அவர் நாச்சிமுத்து என்கின்ற பெண்ணிற்கு அறித்த பெரும்பேறால் அறிய கிடைக்கின்றது.நாச்சிமுத்து அம்மையார் நாள்தோறும் வேதகிரீஸ்வர் மலைக்கு சென்று இறைவன் முன்னிலையில் திருக்கழுக்குன்ற மாலைப் பாடல்களை பாடி வணங்கி வருவது வழக்கம். ஒரு நாள் பெருமழையால் நாச்சிமுத்து அம்மையாரால் வேதகிரீஸ்வர் மலைக்கு செல்ல முடியவில்லை.அங்கனம் போக முடியாத சமயம் தன் வீட்டிலிருந்தபடியே “எம் பெருமானே” இம் முற்றத்திலே வந்து முன் நின்றால் எளியேன் பாடி மகிழ்வேன் என கூறி இரங்கி –
பெற்றத்தி லேவருங் கோலமும்
தாமுமென் பெண்மையுய்ய
முற்றத்தி லேவந்து முன்நிற்கி
லோ! முது வானவர்தம்
சுற்றத்தி லேகதிர்த் தோற்றத்தி
லேதொல்லை நான்மறைநூல்
அற்றத்தி லே கழுக் குன்றத்தி
லேநிற்கும் அற்புதனே!
என்னும்பாடலைப் பாடி மன முருக இறைவன் இவள் வீட்டு முற்றத்திலே வந்து காட்சி தர இவள் பேரானந்த்துடன் இறைவனை வணங்கி எழுந்தாள். பின்னர் இறைவன் எழுந்தளும் போது அவரை பிரிய மனம் இல்லாமல் அவரது இடபவாகனத்தின் திருவடியை இவள் பிடித்துக்கொண்டு அப்படியே கயிலைக்கு கிளம்ப,அக்காட்சியை கண்டு நின்ற அவள் ஆசிரியர் -வைணவர்- அவளுடன் தாமும் சேரந்து கயிலைக்கு சென்று சேர்ந்தாராம். அதற்கான பாடல்-
“உருக்கமுள ஒருதாதி நாச்சிமுத்
தென்னுமவள் ஒருவயிணவன் பாடிய
உயர்கழுக் குன்றமா லைப்பிரபந்
த்திளாள் ஒன்றினுக்கு ஒரு கவிதையாய்ச்
சருக்கரை கலந்தபா லமுதமென
மலையின் மேல் தம்பிரான் முன்பு பாட
சண்டா ருதமழையி னாற்றப்ப
ஒருதினம் தாதிதான் பாட ஈசன்
அருக்கணாயிரகோடி என விடையில் வர
விடையின் அடியைப்பிடிக்கும் அவளோ
டவளடி பிக்குமவ்வ வயிணவனை
யுங்கொண்டுபோய் கயிலை வாழவைக்கும் திருக்கழுக் குன்றமெனும்
வேதகிரி வருமுருக சிறுபறை முழக்கி யருளேள! சிறியனேன் கேட்கவே அருள்நாத
ஒலியெனும் சிறுபறை முழுக்கி யருளே!
புகைப்பட உதவி:- தினமலர்.
தகவல்:-திருக்கழுக்குன்ற மலர் 06.07.1951 இதழிலிருந்து.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷபதீர்த்தகுளம்.





1890 ஆம் ஆண்டு சமயத்தில் நமது #திருக்கழுக்குன்றம் #ரிஷபதீர்த்த குளம் உங்கள் பார்வைக்கு...இதில் தேரினை பாருங்கள் ஓலைகொண்டு மூடிஉள்ளார்கள். அதுபோல ரிஷிகோபுரத்தின் முன் மண்டபமும் இல்லை...

#நமதுஊர்..#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்.
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-திரிபுரசுந்தரி அம்மன் பாடல்

#திருக்கழுக்குன்றம்:-#திரிபுரசுந்தரி அம்மன் பாடல்
சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் திரு.சீர்காழிகோவிந்தராஜன் அவர்கள் நமதுஊர் -#திருக்கழுக்குன்றம் #திரிபுரசுந்தரி அம்மன்பற்றிதனிப்பாடல்பாடியுள்ளார்.



அந்தபாடலையும் #திரிபுரசுந்தரி அம்மன் புகைப்படங்களை மட்டும் இணைத்து வீடியோவாக பதிவிட்டுள்ளேன்..
#நமதுஊர்..#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
புகைப்பட உதவி:-Raaja Raajan
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்