#திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....

 #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....








#பஞ்சபூதம் பெயர்க்காரணம் பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக பஞ்சலோகம் என்பது 5 உலோகங்களின் கலவை எனலாம். இது போல முக்கியமான 5 கூறுகளினை 5 பூதங்கள் அல்லது #பஞ்சபூதங்கள் என்பர். ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாகவும், ஏதேனும் ஒரு தன்மையினாலும் அல்லது இயற்கையான நிலவரத்தினாலும் இப்பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.
#நிலம், #நீர், #நெருப்பு, #காற்று, #ஆகாயம் ஆகியவற்றை #பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது.
பரம்பொருளாகிய இறைவன் இந்த #பஞ்சபூதங்களில் கலந்திருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆன்மிக ரீதியாக #பஞ்சபூதங்களுக்கும் திருத்தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவை:-
#சிதம்பரம் (ஆகாயம்)-ஆகாச லிங்கம்
#காளகஸ்தி (காற்று)-வாயு லிங்கம்.
#திருவண்ணாமலை (நெருப்பு)-அக்னி லிங்கம்
#திருவானைக்காவல் (நீர்)-ஜம்பு லிங்கம்
#காஞ்சீபுரம் (நிலம்)-பிருத்வி லிங்கம் ஆகும்.
நமது #திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலில் #பஞ்சபூததலங்கள் அமைந்துள்ளன.தனித் தனியாக ஒவ்வொரு ஊராக சென்று சிவனை தரிசனம் செய்ய இயலாதவர்கள் #திருக்கழுக்குன்றம் வந்து பஞ்ச பூத தலங்களை இங்கேயே தரிசிக்கலாம். #பஞ்சபூத தலங்களுக்கு செய்யப்படும் பரிகாரங்களை இங்கேயே முடித்துக்கொள்ளலாம்.#பஞ்சபூததலங்களில்
ஆகாயத்திற்குரிய #சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும், பழமையானதும் ஆகும். பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, #சிதம்பரத்தில் தொடங்கி #காளகஸ்தி, #திருவண்ணாமலை, #திருவானைக்காவல், #காஞ்சீபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்வது மரபு.இந்த வரிசைப்படி #திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச பூதங்களை தரிசிக்க வேண்டுமானால் வலமிருந்து இடமாக செல்லவேண்டும். அதன்படி முதலில் #நடராஜர்,#காளத்திஸ்வரர்.#அருணாசலேஸ்வரர்.#ஜம்புகேஸ்வரர் மற்றும் #ஏகாம்பரஸ்வரர் சன்னதிகள் அமைந்துள்ளது.இடமிருந்து வலமாக அமைக்காமல் வலமிருந்து இடமாக தரிசனம் செய்திடஎந்த காரணத்தினால் இந்த வரிசைப்படி நமது ஊரில் அமைத்தார்கள் என தெரியவில்லை. #பஞ்சபூத தலங்களுக்கும் சென்று தரிசிக்க முடியாதவர்கள் #திருக்கழுக்குன்றத்திலேயே இறைனை தரிசித்து இறைவன் அருள்பெருங்கள். #திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலில் அமைந்துள்ள #பஞ்சபூத தலங்களின் புகைப்படம் உங்கள் பார்வைக்கு... #நமதுஊர்..#நமதுபெருமை…
#வாழ்கவளமுடன்
#வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam

 #திருக்கழுக்குன்றம்:-#அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை..



#அன்னாபிஷேகம் பற்றிய புராண கதை என்ன ? #அன்னாபிஷேகம் கொண்டாடும் காரணம் என்ன ? #அன்னாபிஷேகப் பலன்கள் என்ன ?
#அன்னாபிஷேகத்திற்கு பிடி அரிசி தரும் நன்மைகள் என்ன என்று விளக்கமாக பார்க்கலாம் இது கொஞ்சம் பெரிய பதிவா இருந்தாலும் அன்பர்கள் இந்த பதிவை முழுசா பார்த்து பயன் பெறுங்கள்.
எந்த வேலையும் செய்யாமல் ஓசி சோறு உண்டு வெட்டியாக ஊர் சுற்றுபவர் குறித்து சோறுகண்ட இடம் சொர்க்கம் என்று செல்லப்படுகிறது ஆனால் அது உண்மை பொருள் என்னவென்றால் சோறு ஆகிய அன்னத்தை அதாவது #அன்னாபிஷேகத்தை கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் இது தான் காலப்போக்குல சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று மாறிடுச்சு இந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதி வெள்ளிக்கிழமை #அன்னாபிஷேகப் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது
கல்லினுள் தேரை முதல் கருப்பையிலுள்ள உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் தான் ஈசன் அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்கள் #அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது சரி அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் தான் செய்ய வேண்டும் மற்ற மாதங்களிலும் செய்யலாம் என்ற ஒரு சந்தேகம் வரும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான் அப்படி சந்திரனின் சாபம் தான் என்ன அதுதான் இதோட புராணப் பின்னணி என்ன என்று பார்க்கலாம் இந்த கதை வந்தது பல பேருக்கு தெரிந்த கதை தான் சந்திரன் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாராபட்சம் காட்டியதால் மாமனார் டென்ஷனால் உடல் நலிவுபெறும் என்று சாபம் பெற்ற சாபத்தினால் சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது அதனால் மிகவும் மனம் வருந்திய சந்திரன் சாபம் நீங்க என்ன வழி என கேட்க திங்களூரில் சிவனைப் பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார் தட்சன் உடனே சந்திரன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான் அவன் மேனியின் ஒளியில் நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது மூன்றே மூன்று கலைகள் மிச்சம் இருக்கும் போது சிவனார் அவன்பால் மனமிரங்கி அந்த பிறையை தனது தலையில் அணிந்து கொண்டார் கொடுத்த வாக்கை மீறி அவளுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுதும் வருடத்தில் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று மட்டுமே கிடைத்தது அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும் இது எப்போது நடக்கும் பாதை நான் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச்செய்தார் விளைவாக திங்கள் முடி சூடி அவருக்கு மதி முழுமையுடன் ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வது தானே சிறப்பு ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது அக்டோபர் மாதத்தில்தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகின்றன என்கிறது வானவியல் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப் படுத்தினார்கள் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமைதான் அந்த ஐப்பசி பௌர்ணமி அபிஷேகத்திற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது ஒவ்வொரு அண்ணப்பர் கையிலும் சிவரூபம் உள்ளதா புராணங்கள் கூறுகின்றன இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்காது என்பதை உணர்த்தவும் அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது அதுமட்டுமல்ல நமது பேரண்டம் நிலம் நீர் ஆகாயம் காற்று நெருப்பு என்ற பஞ்சபூதங்களால் ஆனது அந்த பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படும் செய்து உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றி கிட்ட அருள்செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும் நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப்பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு #அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நிலையத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து காற்றினில் விரித்து சூரியனின் வெப்பத்தால் உருகி விளைச்சலை நமக்குத் தருகிறது காற்றின் உதவியுடன் கதிர் அறுத்து எடுக்கப்படும் நெல் உமி நீக்கப்பட்ட அரிசி ஆனபின் மண்ணாலான பானையில் நீரில் நிரப்பப்பட்டு காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால் தான் #அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது #அன்னாபிஷேகம் நடைபெறும் முறை என்பதைப்பற்றி பார்க்கலாம் என எல்லோருக்குமே தெரியும் அபிஷேகப்பிரியர் அதனால் அவருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம் நீர் பசும்பால் இளநீர் கரும்புச்சாறு சந்தனம் விபூதி தயிர் பஞ்சாமிர்தம் மாப்பொடி மஞ்சள் வண்ணம் இவன் தான் அவருக்கு அபிஷேகப் பொருட்கள் இவற்றுள் மிகச் சிறப்பானது தான் #அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பின்னர் நன்கு வடித்து ஆறவைத்து அன்னத்தைக் கொண்டு தேவையானால் கொஞ்சம் நீர் கலந்துக்கலாம் இப்படிப்பட்ட ஒரு அன்னபிஷேகத்தை நாம செய்யணும் சிவலிங்கத் திருமேனியின் மேல் இருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள் சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் கீழ்ப்பகுதி அதுதான் பிரம்ம பாகம் நடுப்பகுதி விஷ்ணு பாகம் இதுவே அவருடைய நாமம் சொல்வேன் மேற்கு வந்த பார்த்த மேற்பகுதி பாதி நான் பானம் அதுதான் சிவபாதம் அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா வாகனங்களுக்கும் ஆக முழுமையாக செய்யப்படும் இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும் அந்த சமயத்தில் வேதபாராயணம் உருத்திரம் கொண்டு மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும் நாழிகை நேரம் முடிந்தவுடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள் பின்னர் மீதமிருக்கும் மற்ற ஐந்து வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும் நமது சனாதன தர்மம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும் அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாடு விதையை நன்கு அறிந்து நம் முன்னோர்கள் எல்லா விஷயங்களிலும் சொன்னாங்க அதனால்தான் அன்னாபிஷேக பிரசாதம் நீரில் வாழும் புழு பூச்சிகள் மீன்கள் மற்ற நீர்வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கலக்கப்படுகிறது மனித உடலுக்குத் தேவையான கதிர்வீச்சுக்கள் நிறைந்திருக்கும் லிங்கத்தின் பிரவாகத்தில் சாப்பிட்டால் நம் மனிதர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது இப்படிப்பட்ட #அன்னாபிஷேகப் பலன்கள் என்ன நான் பார்த்தால் #அன்னாபிஷேகம் நமக்கு அளவற்ற இன்பம் தரக்கூடியது #அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால் அன்னதானம் செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கின்றது அன்னம் என்பது என்னன்னா பிரம்மா விஷ்ணு சிவ சொரூபமாக கருதப்படுகிறது ஜீவன் கொடுக்கும் வண்ணம் சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது ஆண்டவன் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் அப்படின்னு சொல்வாங்க அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சந்தலை சிறப்புடையதாகும் சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம் எனவே அந்த சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் #கோடிசிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும் இறைவனுக்குப் படைக்கப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்து அந்த பிரசாதத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு என்றும் அந்த ஆதாரத்திற்கு குறைவிருக்காது மேலும் இந்த பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம் #அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டால் தோற்றப் பொலிவும் தன்னம்பிக்கையும் கைகூடும் வியாபாரத்தில் சிறப்பை விரும்புவோரும் அலுவலகத்தில் பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்போரும் #அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை உண்டால் வியாபாரம் பதவி உயர்வும் தேடி வரும் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்றது எது சில குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள் ஆனால் தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போகும் அந்த குழந்தைகள் #அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டால் பிடித்து படித்தது எல்லாம் நன்றாக நினைவில் நிற்கும் வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும் முன்ஜென்ம பாவங்கள் தீரும் பித்ரு தோஷம் மற்றும் சாபங்கள் போன்றவையும் நீங்கும் நீண்ட நாளாக குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் #அன்னாபிஷேகத்தை கண்ணாரக்கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும் #அன்னாபிஷேகம் குறைவின்றி நடந்தால் அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும் ஊர் செழிக்கும் கலைகள் வளரும் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை
வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும் இவைகள் தான் #அன்னாபிஷேகப் பலன்கள் அதேபோல பிடியரிசி தரும் பல நன்மைகள் இருக்கு அதையும் பார்க்கலாம் தானங்களில் சிறந்தது அன்னதானம் ஆகும் எவ்வளவு பெரிய தான தர்மங்களை செய்தாலும் அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்கு செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது உணவைத் கூறியதாக மட்டுமே சேமித்து பதுக்கி வைக்கும் நபர்களுக்கு இறை அருள் கிட்டாது என்று வேதங்கள் அடித்துக் கூறுகின்றனர் எனவே #அன்னாபிஷேக நாளில் ஒரு பிடி அரிசி எனும் தானமாக அளித்தால் நம் வாழ்வில் யோகமும் ஞானமும் பெற்று வீட்டில் தரித்திர நிலையில் ஒழித்துவிடலாம் எப்போதும் உணவுக்கு பஞ்சம் இருக்காது வீட்டில் சந்திரன் பெற்றது போல நாமும் ஈசனின் பரிபூரண அருளைப் பெற்று ஒளிமயமான எதிர்காலத்தை பெறலாம்
சிவாலயங்களில் நடைபெறும் #அன்னாபிஷேகத்தில் பங்கேற்று ஈசனின் அருள் பெற்று அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தி வணங்குகிறோம் என்பதே பலருக்கு தெரிந்திருக்கும் ஆனால் இன்றைய தலைமுறைக்கு நிறைய பேருக்கு அன்னாபிஷேகத்தை பத்தி தெரியாது இன்னைக்கு #அன்னாபிஷேகம் பற்றிய புராணக்கதை அன்னாபிஷேகம் கொண்டாடும் காரணம் #அன்னாபிஷேகப் பலன்கள் அபிஷேகத்திற்கு பிடி அரிசி தந்தா என்ன நன்மைகள் என்று விளக்கமாக பார்த்தோம் அதனாலேயே இந்த ;நீண்ட பதிவு...
#வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.

 #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.



#திருக்கழுக்குன்றம் மலைமீது உள்ள அருள்மிகு #வேதகிரீஸ்வரருக்கு #பவித்ரோச்சவம் நடைபெற உள்ளது. வருகின்ற 28.10.2020 புதன்கிழமை மாலை ஆரம்பித்து 30.10.2020 வெள்ளிக்கிழமை மதியம் வரை #பவித்ரோச்சவம் நடைபெற உள்ளது.
#பவித்ரோச்சவம் என்றால் என்ன?
மூலவருக்கு தினசரி செய்யப்படும் அபிஷேகம்.ஆராதனை.நெய்வேய்தியம், பூஜைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறுசிறு குறைகளை நிவர்த்தி செய்ய வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும் உற்சவம் #பவித்ரோச்சவம் எனப்படுகின்றது.அத்தகைய பெருமை வாய்ந்த #பவித்ரோச்சவம் 28.10.2020 அன்று ஆரம்பமாகின்றது.அனைவரும் வருக..இறைவன் அருள் பெருக.. #நமதுஊர்.. #நமதுபெருமை...
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.

 #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.



24.10.2020 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு மேல் #திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலில் உள்ள #ஶ்ரீதிரிபுரசுந்தரி அம்மனுக்கு முழு அபிஷேகம் நடைபெற உள்ளது. வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே அம்மனுக்கு முழு அபிஷேகம் நடைபெறும். 2020 ஆம் ஆண்டின் கடைசி அபிஷேகம் இது..அனைவரும் வருக..அம்மன் அருள் பெருக... #நமதுஊர்...#நமதுபெருமை........
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்