திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.


#திருக்கழுக்குன்றம்:-#சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.
#திருக்கழுக்குன்றம் #சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறப்பது யாவரும் அறிந்ததே..கடந்த 01.09.2011 அன்று சங்கு பிறந்த சமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
#சங்கு எடுத்துவர கோயிலிருந்து பல்லக்கு கொண்டுசெல்லப்படுகின்றது.


 #பொதுமக்கள் குளத்தில் சங்கை பார்வையிடுகின்றனர்.




 #சங்கு ஊர்வலமாக குளத்தினை சுற்றி எடுத்துவரப்படுகின்றது.
 #குருக்கள் சங்குக்கு அபிஷேகம் செய்கின்றனர்...#
 தாம்பூல தட்டில் பச்சரிசி வைத்து அதில் குளத்து நீரை ஊற்றி சங்கு அதில் வைக்கப்பட்டுள்ளது.


#சங்கு கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றது...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-கழுகுகள் மற்றும் சங்குகள் பிறப்பதுபற்றி...

#திருக்கழுக்குன்றம்:-கழுகுகள் மற்றும் சங்குகள் பிறப்பதுபற்றி...

சுமார் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள்.ஊர்சுற்றிவிட்டு -விளையாடிவிட்டு வீட்டுக்குவரும்சமயம் பெற்றோரிடம் இந்த வசனத்தினை கேட்டிருப்பாரகள்:- சாப்பாட்டு நேரத்திற்குபார் கரேக்டா(சரியாக) #திருக்கழுக்குன்றம் #கழுகுமாதிரி வந்துட்டான் என்பார்கள். போன் வசதியில்லாத நேரத்தில் விருந்தினர்கள் திடீர்வருகையையும் சாப்பாடுநேரத்திற்கு #கழுகுமாதிரிவந்துவிட்டார்கள் என்பார்கள்.இதனையும் சங்குபிறப்பது பற்றியும் குறிப்பிட்டு இவர் சொல்வதை கேளுங்கள்...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-திருவிழாவில் உற்சவர்கள் மாடவீதி வலம்வரும் பாதை -ஏரியல் பார்வையில்.

#திருக்கழுக்குன்றம்:-திருவிழாவில் உற்சவர்கள் மாடவீதி வலம்வரும் பாதை -ஏரியல் பார்வையில்.






#திருக்கழுக்குன்றத்தில் #திருவிழாக்கள் நடைபெறும் சமயம் #உற்சவர்கள் மாடவீதியில் வலம் வருவார்கள். ஏரியல் பார்வையில் வலம்வரும் பாதை உங்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது..திருவிழா சமயத்தில் உற்சவர்கள் வலம்வரும் #கோபுரதரிசன விவரங்கள்:-
1. #கிழக்குகோபுரம்:- தேர் உற்சவர்(7ஆம் நாள்திருவிழா-காலை மட்டும்)
2. #மேற்குகோபுரம்:- 4 ஆம் நாள் உற்சவம் காலை மற்றும் இரவு..
3.#வடக்குகோபுரம்:- 3-ஆம் நாள் காலை 6-ஆம் நாள் காலை மற்றும் இரவு
4.#தெற்குகோபுரம்- 1,2,3(இரவு),5,8,9,10,11ஆகிய நாட்களில் ...
#நமதுஊர்..#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்