திருக்கழுக்குன்றம்:-வேதகிரீஸ்வரர் தரிசனம் வேண்டி...

 திருக்கழுக்குன்றம்:-வேதகிரீஸ்வரர் தரிசனம் வேண்டி...

ஞானதிருவடி தேடி...எனது சிறிய வீடியோ...


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய பாடல்..

 திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய பாடல்..

1921 ஆம் ஆண்டு வெளிவந்த தேவார சிவதல வெண்பா என்கின்ற நூலில் நமது திருக்கழுக்குன்றம் பற்றிய பாடல் வந்துள்ளது.
பாடல்:-
தலமன் கிரியாந் தனைப்பக்தி யோடு
வலமவருவார்க் காணவமுன் வாய்ந்த --மலமென்
வழுக்குன்ற வண்மையாம் வான்கதிநெஞ் சேசீர்க்
கழுக்குன்ற வண்மையாற் காண்.



பாடலின் பொருள்:-
பஞ்ச சக்திகளை நிலையாக கொண்டு நிலையான இடமாக இருக்கின்ற திருக்கழுக்குன்ற மலையை பக்தியோடு சுற்றி வருபவர்களுக்கு ஆணவம்.கன்மம்.மாயை என்கின்ற மும்மலங்களும் நீங்கி வளமையான வானுலகத்தை அடைகின்ற சிறப்புண்டாகும். அவ்வாறான பெருமையும் வளமையும் உடையது திருக்கழுக்குன்றமாகும்.
வாழ்க வளமுடன்

பாடல் விளக்கத்திற்கு உதவி:-திரு.ரவிச்சந்திரன் பூபதி.




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-2013 ஆம் ஆண்டு கோயில் சீரமைக்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

 #திருக்கழுக்குன்றம்:-2013 ஆம் ஆண்டு #தாழக்கோயிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் #சங்குதீர்த்த குளம் மதில்சுவர் சீரமைக்கப்பட்ட சமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...

சங்கு தீர்த்த குளம்:-

கிழக்கு கோபுரம்:-

ரிஷி கோபுரம்:-


சங்கு தீர்த்த குளம்:-



ராஜகோபுரம் மற்றும் ரிஷிகோபுரம்:-


சோமஸ்கந்தர் ஆலயம்:-


வண்டுவன வினாயகர் மற்றும் ஜம்புகேஸ்வரர் ஆலயம்:-



முருகன் ஆலயம்:-

அருணாசலேஸ்வரர் கோயில்:-


பிரதஷ்ண வேதகிரி:-


#நமதுஊர்..#நமதுபெருமை..

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

 திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.

திருக்கழுக்குன்றம் #சங்குதீர்த்த குளக்கரையின் மேற்கு புறத்தில் கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் தீவணத்திற்கான தொட்டிகள் அந்த காலத்தில் கட்டி வைத்திருந்தனர்.குளத்தில் இருந்து நீர் இறைத்து தொட்டிகளில் ஊற்றி விடுவார்கள். மாட்டுத்தீவணங்களையும் -வீட்டில் அரிசி கழுவும் நீர் -சாதம் வடிக்கும் தண்ணீரையும் இதர தொட்டிகளில் வந்து ஊற்றிவிட்டு செல்வார்கள். கால்நடைகள் வந்து பசி ஆறி தாகம் தீர்த்து சென்றன. நவீன மயமாக்குதலில் அந்த தொட்டிகள் இடிக்கப்பட்டது. தற்சமயம் வாயில்லா ஜீவன்கள் நீருக்கு தவிக்கின்றன.சில கடைக்காரர்கள் கடையின் ஒரு ஓரமாக கால்நடைகளுக்கு நீர் வைக்கின்றனர். சில வீடுகளில் வசிப்பவர்கள் அரிசி கலையும் நீர் - சாதம் வடிக்கும் தண்ணீரை வைக்கின்றனர்.நால்வர்கோயில் பேட்டையில் வசிக்கும் ஒருவர் தினசரி மாடுகளுக்கு தீவணமும் மற்றும் தண்ணீர் கொடுத்து செல்கின்றார்.நாமும் வாயில்லா ஜீவன்களுக்கு இயன்றதை செய்வோம்...

நமதுஊர்..நமதுதகவல்..
வாழ்கவளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது.

 திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது


இந்திரலோகத்தில் ஒருமுறை தேவ கன்னிகை ஒருவர் அழுது கொண்டிருந்தார் அவர் அழுகுரல் கேட்டு அங்கு வந்த இந்திரன் அழுவதற்கான காரணம் கேட்டார் அதற்கு அந்த தேவ கன்னிகை தம்மிடமிருந்த தங்க பந்தினை வாலிபர் ஒருவர் பறித்துக்கொண்டு கைலாயம் நோக்கி சென்றதாக குறிப்பிட்டார் தேவ மங்கை குறிப்பிட்ட பந்தை எடுக்க வேண்டி கைலாயம் சென்றார்.சிவபெருமான் அப்போது அந்த பந்து தமது அருகே இருக்குமாறு மாயை செய்து பார்வதிதேவியை  ஒரு கன்னியாகவும் தன்னை ஒரு வாலிபனாகவும் வடிவெடுத்து சூதாடுபவர்போல திருவிளையாடல் இயற்றினார். சிவபெருமான அருகே பந்து இருப்பதை கண்ட இந்திரன் அவர் பந்தினை கவர்ந்ததாக கருதி அவரைப்பலவாறு இகழந்து பந்தினை கேட்டான். சிவபெருமான் இந்திரன் கூறியதை கேளாதவர் போல் இருந்தார். இந்திரன் வெகுண்டு அவரை தன் வச்சிராயுதத்தினால் தாக்க கருதி வச்சிராயுதத்தினை ஓங்கினான். சிவபெருமான் இந்திரனை கடைக்கண்ணால் நோக்கினார். ஒங்கிய கையுடன் இந்திரன் கம்பம்போல் அசைவற்று நின்று விட்டார்.பிறகு சிவபெருமான் அருகில் இருந்த தோழியை அழைத்து விஷமுள்ள பாம்புகளால் இந்திரனை கட்டி பாதாள குகையில் அடைக்குமாறு கட்டளையிட்டார். இந்திரன் தான் செய்த தவறினை எண்ணி பாதாள சிறையில் வருந்திக்கொண்டிருந்தார். தேவகுரு தேவர்களுடன் இந்திரனை பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் கயிலை அடைந்தார். இந்திரன் செயல் மற்றும் இருக்கும்இடம் அறிந்து மிகவும் அஞ்சி தேவர்களுடன் சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து இந்திரனை மன்னிக்குமாறு வேண்டினான். சிவபெருமான இந்திரனை சிறை நீக்கி அழைத்துவர செய்தார். இந்திரன் சிவபெருமான் காலடியில் விழுந்து இப்பாவம் நீங்க அருளுமாறு கேட்டார். இப்பாவம் நீங்க திருக்கழுக்குன்றம் அடைந்து தவமிருக்குமாறு சொல்லினார். இந்திரன் திருக்கழுக்குன்றம் அடைந்து குளம் வெட்டி(இந்திர தீர்த்தம்) பூக்களாலும் -நன்னீராலும் இறைவனை பூஜைசெய்து அவரருள் பெற்று தன்பதம் அடைந்தார்.அதுமுதல் இது இந்திரபுரி என்றும் அழைக்கப்படுகின்றது. திருக்கழுக்குன்றத்தில் இந்திரன் பூஜித்தார்.தொடர்ந்து பூஜித்தும் வருகின்றார் என்பதற்கு அடையாளமாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுர கலசத்தருகே உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தினை சுற்றிப் பாய்ந்து விடுகின்றது. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை நடக்கின்றது.1889 ஆம் ஆண்டு.1901 ஆம் ஆண்டு மற்றும் 10.11.1930 ஆண்டும் நிகழ்ந்தது. இதுகுறித்தும் புலவர்கள் பாடியுள்ளனர்.இடிவிழுந்த மறுநாள் கோயில் நடை திறக்கையில் கருவறைக்குள் வெப்பம் பரவியுள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைப்படம்:-இரவில் கடுமையாக மழைபெய்த நேரத்தில் எடுக்கப்பட்டது.

நமதுஊர்..நமதுபெருமை..

வாழ்கவளமுடன்.

வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-நமதுஊர் கழுகுகள் பற்றி டெக்கான் ஹெரால்ட் ஆங்கில இதழில் வெளிவந்துள்ள கட்டுரை -தமிழாக்கம்.

 திருக்கழுக்குன்றம்:-நமதுஊர் கழுகுகள் பற்றி டெக்கான் ஹெரால்ட் ஆங்கில இதழில் வெளிவந்துள்ள கட்டுரை -தமிழாக்கம்.


சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு செய்திதாள்களில் ஜெய்பூரிலிருந்து மும்பைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் நோய்வாய்பட்ட கழுகுகள் எடுத்துச்செல்லப்படுவதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டன. இந்தியாவில் 97 சதவீதமாக கழுகுகள் அழிந்துவிட்டன.
ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கியோலாடியோ சரணாயலத்தில் இனப்பெருக்க காலத்தில் முந்தைய ஆண்டில் 350 கூடுகளுடன் ஒப்பிடும்போது 1999 ல் வெறும் 20 கூடுகள் மட்டுமே காணப்பட்டன.கழுகுகள் 50 முதல் 60 ஆண்டுகள் வரையிலான ஆயூட்காலம் கொண்டவை. அவைகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுட்டை இடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.
கழுகுகளின் இந்த பற்றாக்குறை நகர்புற மற்றும் கிராப்புற வாழ்க்கையை பல்வேறு வழிகளில் பாதித்துள்ளது.மேலும் மும்பையில் பார்சி சமூகம் அதன் புனிதமான டவர்ஸ்ஆப் சைலன்ஸ்(இறந்தவர்களின் கழுகுகளால் சாப்பிடுவதன் மூலம் அப்புறப்படுத்தப்படுகின்றது) கழுகுகள் புதிய கழுகுகள் தொடங்க நினைத்து வருகின்றது.ஆனால் இந்திய வரலாற்றில் மிகவும் பிரபலாமான கழுகுகள் காணமல் போனதை அனைவரும் மறந்துவிட்டார்கள்.தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பட்சிதீர்த்தம் கோயில்-பட்சிதீர்த்தத்தின் தமிழ்பெயர் –#திருக்கழுக்குன்றம்.அதாவது #புனித கழுகுகளின் மலை சன்னதி.
1992 ஆம் ஆண்டு வரை சரியாக காலை 11.50 மணி அளவில் இரண்டு கழுகுகள் சிவனின் மலை ஆலயத்தை சுற்றி வளைத்து மலை சன்னதியில் பாறையின் மீது இறங்குகின்றன. அங்கு தேசிகர் கோயில் பிரசாதத்துடன் அவைகளுக்காக காத்திருப்பார்.பாரம்பரியத்தின்படி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளபடி குறைந்தது 328 ஆண்டுகளாக இரண்டு கழுகுகள் #திருக்கழுக்குன்றத்தில் உள்ள புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு மரியாதை அறித்து வருகின்றன.
1670 ஆம் ஆண்டில் இந்த கோயிலுக்கு வந்த டச்சு பார்வையாளர்கள் கோயில் தேசிகர் வழங்கிய உணவை உண்ணுவதற்காக வானத்திலிருந்து இறங்கும் இரண்டு கழுகுகளையும் கண்டனர்.மேலும் 1992 ஆம் ஆண்டு வரை பொதுமக்கள் தினசரி உணவுக்காக வரும் இரண்டு கழுகுகளையும் புகைப்படம் எடுத்துவந்தனர். தினசரி மதிய நேரத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சில மீட்டர் தூரத்தில் தள்ளியிருந்து பட்சிகளை தரிசித்து வந்தனர். 1992 ஆம் ஆண்டிலிருந்து பட்சிகள் தோன்ற தவறிவிட்டன.இதுவரை பட்சிகள் வரவில்லை.கழுகுகள் தோன்றவே இல்லை.கழுகுகள் வருவதற்கு முன்னர் தேசிகர் கழுகுகளுக்கு சக்கரைப்பொங்கல் கொடுப்பதற்கு சக்கரைப்பொங்களுடன் கழுகுகளுக்காக காத்திருப்பார். கழுகுகள் காணப்பட்டதும் பார்க்கும் பக்தர்களிடையே திடீரென உற்சாகம் பிறக்கும். சத்தமாக இருந்தால் சத்தத்தின் மத்தியில் கழுகுகள் தரையிறக்க மறுக்கும். பிறகு அனைவரும் மவுனமாகி விடுவார்கள்.சுற்றுசூழல் அமைதியான பின்னர் கழுகுகள் மெதுவாக தரையிறங்கும்.உணவு உண்டபின்னர் பறந்து செல்லும்.
உள்ளுர் ஸ்தல புராணம் (அல்லது மதவரலாறு) கூறியுள்ளதுபடி இந்த இரண்டு கழுகுகள் பூஷா மற்றும் விதாதா ஆகிய இரண்டு புகழ்பெற்ற புனிதர்கள் அவர்கள் ஆணவத்தில் சிவபெருமான் கொடுத்த வரத்தை அவர்களின் தவத்திற்கான வெகுமதியாக ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் சிவபெருமானால் சபிக்கபட்பட்டனர். மனம் திருந்திய முனிவர்கள் தங்களை மன்னிக்குமாறு கொஞ்சியபோது அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கழுகு வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும் பட்சிதீர்த்தில் உள்ள கோயிலின் பிரசாத்ததை சாப்பிட்டதிலிருந்து அவர்ககளின் விடுதலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
புராணக்கதைகளில் கழுகுகள் பெனாரஸில் (வாரணாசி எனப்படும் காசி)உள்ள கங்கையில் குளிக்கின்றன.பட்சிதீர்த்தத்தில் உணவுஉட்கொள்கின்றன.மாலை உணவுக்காக இராமேஸ்வரம் செல்கின்றன.இரவில் மீண்டும் காசிக்கு திரும்புகின்றன.சாத்தியமில்லாத சாதனை. ஆனால் உண்மை அதுதான். #திருக்கழுக்குன்றத்தில் மதிய உணவிற்காக இரண்டு கழுகுகளுக்கு மேல் வந்ததாக எந்த பதிவும் இல்லை.
#திருஞான சம்பந்தர் மற்றும் #திருநாவுக்கரசர் #திருக்கழுக்குன்றத்தினை புகழ்ந்து பாடல்களை பாடியுள்ளனர். இது கழுகுகளின் தினசரி வருகைக்கு சான்றளிக்கின்றது.
1670 ஆம் ஆண்டு கோயிலுக்கு விஜயம் செய்த டச்சு அதிகாரிகள் புகழ்பெற்ற ஜோடி கழுகுகள் மற்றும் அவைகளுக்காக காத்திருந்த பெரும் கூட்டத்தினை பற்றிய பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.மறைந்துவரும் பறவைகளைப்பற்றி விவாதிக்க உள்ளுர்வாசிகளை உருவாக்குவது சாத்தியமில்லை.சில மூத்த குடிமக்கள்1992 க்கு பிறகு கழுகுகள் வராததை குறிப்பிட்டுள்ளனர். வெளிப்படையாக குற்றவாளி முனிவர்கள் தங்கள் தவத்தை முடித்துவிட்டு சொர்க்கத்திற்கு திரும்பியுள்ள பக்தியுள்ள நிலை.இந்த நம்ப முடியாத நிகழ்ச்சியிலிருந்து அனைத்தையும் புகைப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்க முடியும்.கழுகுகள் அதை விரும்பாமல் மதிய உணவினை தவிர்த்ததாகவும் கூறப்படுகின்றது.
நவீன விவசாய முறைகள் காரணமாக குறிப்பாக கிராமப்புறங்களில் கால்நடைகள் அதிகமாக உட்கொள்ளும் பூச்சிக்கொல்லிகளின் அளவு கழுகுகள் அவற்றின் மீது ஊடுருவி அவைகளின் வாழ்வினை பாதிக்கும். மேலும் கழுகுகளின முட்டைகளின் ஓடு மிகவும் பலவீனமாக இருக்கும். அடைக்காக்கும் காலம் மற்றும் பறவைகளை கொல்வது.எனவே குறிப்பிட்ட பக்தியுள்ள கழுகுகளை மாற்றுவதற்கு எந்த ஒரு சந்ததி கழுகுகளும் இருந்திருக்காது.படிப்படியாக புராணகதை கீழே இறக்க வேண்டியிருந்தது.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் #திருக்கழுக்குன்றத்தின் “புனித கழுகுகளின் கதை” கடந்த காலத்தின் கதை.மேலும் விளக்கமுடியாத புராணங்களின் ஒரு கோட்டையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கழுகுகள் வராதது பற்றிய வருத்தங்களுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்

 திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்



#திருக்கழுக்குன்றத்தில் உள்ள புண்ணியதீர்த்தங்களில் மூன்றாவது பெரிய குளம் இதுவாகும். #நால்வர்கோயில் குளம் என்று அழைக்கப்படும் இந்த குளத்திற்கு #இந்திர தீர்த்தம் என புராண பெயர் உண்டு. சுமார் 3 ஏக்கர் 85 சென்ட் அளவு கொண்ட குளம் இது. இதன் கொள்ளளவு சுமார் 674 லட்சம் லிட்டர் ஆகும். (தற்சமயம் இதில் நடுவில் தூர் வாரி குளம் ஆழப்படுத்தி உள்ளாரகள். எனவே கொள்ளளவின் அளவு அதிகரிக்கலாம்) சில வருடங்களுக்கு முன்னர் அந்த பகுதி மக்கள் #தைப்பொங்கல் அன்று இந்த குளத்தில் இருந்து நீரை எடுத்து சென்று பொங்கல் வைப்பார்கள்.இனி வரும் காலங்களில் இந்த நீரினை கொண்டு பொங்கல் வைக்க இங்குள்ள மக்கள்தான் முயற்சிக்கவேண்டும்.மேலும் இதற்கு ஏன் #இந்திர தீர்த்தம் என பெயர்வந்தது என அடுத்த பதிவினில் காணலாம்.
#நமது ஊர்..நமதுபெருமை
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்