திருக்கழுக்குன்றம்:-#சங்குதீர்த்த குளம் -நீரின் பயணம்.

#திருக்கழுக்குன்றம்:-#சங்குதீர்த்த குளம் -நீரின் பயணம்.

திருக்கழுக்குன்றம் #சங்குதீர்த்த குளத்திற்கு வரும் நீர் எங்கிருந்து ஆரம்பமாகின்றது என நிறைய பேருக்கு தெரியாது. அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி அருகில் மலையில் இருந்து வரும் நீரினை தடுத்து தடுப்பணை கட்டியுள்ளார்கள். அங்கு ஆரம்பித்து சுமார்1600மீட்டர் (1.6கிலோமீட்டர்)பயணித்து #சங்குதீர்த்த குளம் வந்து சேர்கின்றது. 4 அடி அகலத்தில் ஆரம்பிதத கால்வாய் சில இடங்களில் 12 அடியாகவும் சில இடங்களில் 8 அடி அகலத்திலும் பயணிக்கின்றது.ஒருசில இடங்களை தவிர நிறைய இடங்களில் தடுப்புச்சுவர் நன்றாக உள்ளது.நீர் பயணிக்கும் பாதை அடர்ந்த வனத்துக்குள் சென்ற உணர்வு நமக்கு
.பயணம் உங்கள் பார்வைக்கு..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் பிறந்த சங்குகள்.

திருக்கழுக்குன்றம் #சங்குதீர்த்த குளத்தில் #மார்க்கண்டேயர் காலம் முதல் சமீப காலம் வரை பிறந்த சங்குகளின் புகைப்படங்கள் -#சங்கு பிறந்த தேதி -மற்றும் கிழமை உங்கள் பார்வைக்கு....
  1. 06.06.1939 செவ்வாய் கிழமை.
  2. 01.08.1952 வெள்ளிக்கிழமை.
  3. 01.08.1976 ஞாயிறுக்கிழமை.
  4. 10.06.1988 வெள்ளிக்கிழமை.
  5. 13.06.1999 ஞாயிறுக்கிழமை.
  6. 01.09.2011 வியாழக்கிழமை.
மேற்கண்ட சங்குகளை பார்வையிட விரும்புவோர் கோயில் திறந்தபின் கோயிலில் சென்று பார்வையிடலாம்.







பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-சொக்கபனை வினாயகர்.

திருக்கழுக்குன்றம்:-சொக்கபனை வினாயகர்.
திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள பழமையான வினாயகர் கோயில்களில் இந்த சொக்கபனை வினாயகரும் ஒருவர்.
மலையிலிருந்து கீழிறங்கி அடிவாரம் வழியாக பெரியகோயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.சற்று உள்ளடங்கி உள்ளதால் சரியாக கவனித்தால்தான் கோயில் தெரியும். #கார்த்திகை மாதத்தில் வரும் #கார்த்திகை தீபமன்று பெரிய கோயில் சார்பாக இங்கு #சொக்கபனை ஏற்றுவார்கள்.
அதனாலேயே இந்த வினாயகருக்கு #சொக்கபனை வினாயகர் என பெயர் வந்தது.மற்ற கோயில்களில் வினாயகருக்கு முன் மூஞ்சுறு சிலைகள் இருக்கும். இதில் விஷேஷமாக #யானை சிலை உள்ளது.
மேலும் இந்த கோயிலில் #ராகு-கேது சிலைகள் ஒன்றாக அமைந்துள்ளது
இநத கோயிலின் விஷேஷமாகும். தமிழ்தாத்தா உ..வே.சாமிநாத அய்யர் திருக்கழுக்குன்றத்தில் தங்கியிருந்த சமயங்களில் தினமும் இந்த வினாயகரை தரிசிக்காமல் இருந்ததில்லை.இவ்வளவு பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம் தற்போது சிதிலமடைந்து உள்ளது. கோயிலினை சீரமைத்து பக்தர்கள் வந்து இறைவனை வழிபட வழிவகுத்தால் நன்றாக இருக்கும்.
நமதுஊர்..நமதுபெருமை...
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றத்தின் சிறப்புகள்-தொகுப்பு -1




குழந்தைவரம் இன்றி #திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரருக்கு நோன்பிருந்து பிறந்த குழந்தை #மறைமலை அடிகள் அவர்கள்.
15.07.1876 அன்று பிறந்து இன்றுடன் 144 வருடங்களாகின்றது.அவரின் வாழ்க்கை வரலாற்றில் வந்துள்ள தகவல்கள் உங்கள் பார்வைக்கு....
தொண்டர் திகழ்வது “#தொண்டநாடு”..
சான்றோரை உடையது #தொண்டநாடு-#ஓளவையார்..
#திருவள்ளுவர் –#சேக்கிழார் இருவரும் #தொண்டை நாட்டினரே…
தொண்டநாட்டின் சிறப்பு தலம் “#திருக்கழுக்குன்றம்
அறம்-பொருள்-இன்பம்-வீடு என்னும் நான்மறைப்பொருளைஅன்பர்களுக்கு நினைவூட்டும் “#வேதமலை” இங்கு உள்ளது.
மாணிக்கவாசகர் இறைவன் திருவடிகளை வைத்துகுருபீடம் அமைத்த திருவடி தலம் “#திருக்கழுக்குன்றம்”.
சிவபெருமானுக்கு மலையுச்சியில் அமைந்த திருக்கோயில்#திருக்கழுக்குன்றத்தினைதவிர தமிழகத்தில் வேறுஎங்கும் இல்லை..
#திருக்கயிலாயம் –#திருக்கழுக்குன்றம் இவை இரண்டில்#வேதமலை என்னும் சிறப்புடையது “#திருக்கழுக்குன்றமே”…
தனிப்பெருமைக்குரிய முதல்வனை போல #திருக்கழுக்குன்றம்தமிழ்த்தொண்டு நாட்டில் தனிச்சிறப்புக்குரியதாக உள்ளது.
அழகிய காட்சிகளை உடைய இயற்கைத்தலம்.
பார்வதியை காதலிக்கும் சிவபெருமான் மற்றோர்இடத்தினையும்காதலிக்கின்றாரேன்றால் அது “#திருக்கழுக்குன்றமே”…
சமயகுரவர் நால்வர் பதிகங்களையும் உடையது “#திருக்கழுக்குன்றமே”!
தொண்டநாட்டில் நால்வர் பாடலும் பெற்ற தலம் #திருக்கழுக்குன்றம் தவிரவேறு இல்லை..
ஆண்டவன் தலம் –நோன்புதலம் –மருந்துதலம் என அழைக்கப்படுவது #திருக்கழுக்குன்றமே
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்