வேலன்:- திருக்கழுக்குன்றம்:-#நரசிம்மவர்மனின் ஓரே ஓரு #தமிழ்கல்வெட்டு.


#திருக்கழுக்குன்றம்:-#நரசிம்மவர்மனின் ஓரே ஓரு #தமிழ்கல்வெட்டு.
#திருக்கழுக்குன்றம் மலைமீது அமைந்துள்ள ஒருகல் மண்டபத்தில் #நரசிம்மவர்மனின் ஒரே ஒரு கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டின் பாடம் :



ஸ்ரீ திருக்கழுக்குன்றத்து பெருமான்
னடிகளுக்கு களத்தூர் கோட்டத்
து ........................ திருக்கழுக்குன்ற
த்து ஸ்ரீமலை மேல்
(மூ)லட்டானத்து பெருமான்
னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா
க வாதாபி கொண்ட நரசிங்கப்
போத்த(ர)சர் வைத்தது.
குறிப்பு :பாடலின் விளக்கம்:-
இறைவன் பெயர் #திருக்கழுக்குன்றத்துப்பெருமானடிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
மூலட்டானம் என்பது கருவறை ஸ்ரீகோயிலைக்குறிக்கும்.
புறம் என்பது கோயில் பணிகளுக்காக விடப்பட்ட நிவந்தம் அல்லது கொடையைக் குறிக்கும். பணிகளுக்கேற்பப் பெயரமையும். இங்கே கோயிலின் வழிபாட்டுக்காக (பூசை)க் கொடை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வழிபாட்டுப்புறம். அமுதுபடிக்காக (நைவேத்தியம்) எனில் அமுதுபடிப்புறம் என்றும், விளக்குக்காக எனில் விளக்குப்புறம் என்றும், மடைப்பள்ளிக்காக எனில் மடைப்புறம் என்றும் பலவாறு வழங்கப்படும்.
மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டில் கண்டவாறே இங்கும் ”போத்தரசர்” என்னும் பெயர் வந்துள்ளதை நோக்குக.
கோட்டம் என்னும் ஆட்சிப்பிரிவு பல்லவர் காலத்திலேயே இருந்துள்ளது கருதத்தக்கது.
நரசிம்ம வர்மனின் பெயர் இக்கல்வெட்டில் ”நரசிங்க” என வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பல்லவர் கல்வெட்டுகளில் “சிம்ம” என்னும் சொல்லுக்குப் பதில் “சிங்க” என்னும் சொல்லே பயின்றுவருகிறது எனலாம்.
ஸ்ரீ என்பது கிரந்த எழுத்து.
சில தகவல்கள் ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இந்த கல்வெட்டும் #பல்லவ மாமல்லன் #நரசிம்மனின் ஒரே தமிழ்கல்வெட்டு என குறிப்பிடுகின்றனர்.கல்வெட்டின் புகைப்படமும் கல்வெட்டு இருக்கும் இடமும் உங்கள் பார்வைக்கு..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்