திருக்கழுக்குன்றம்:-நவகிரககோயில்.


பழமையான புகழ்பெற்ற #சிவன்கோயில்களில் நவகிரகங்கள் இருப்பதில்லை.அதுபோல நமது ஊரிலும் மலைமீது அமைந்துள்ள #வேதகிரீஸ்வரர்கோயிலிலும்.#தாழக்கோயிலிலும்.#உருத்திரர்கோயிலிலும் நவகிரக சன்னதி இல்லை.நவகிரகங்களுக்கு பதில் மலைவலப்பாதையில் எட்டு திசைகளிலும் நந்திகள் உள்ளது;நமக்கு வரும் சங்கடங்கள் #வேதகிரீஸ்வரரே பார்த்துக்கொள்வார் என்பதால் தனியே நவகிரக சன்னதி அமைக்கவில்லை.

1952 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரகடம் பகுதியை சேர்த்த பெண்மணி ஒருவரால் இப்போதைய நவகிரகக்கோயில் கிரிவலப்பாதைக்கு வெளியில் முதலில் அமைக்கப்பட்டது. இப்போது இராஜலிங்கேஸ்வரர் கோயில்.கோதுமைகொல்லைதெரு முத்துமாரி அம்மன் கோயிலிலும்.மின்சார வாரியம் அலுவலகம் அருகில் ஒன்றும்.ருத்திரான்கோயிலில் காளிகோயிலிலும்.முத்திகை நல்லான் குப்பத்திலும் நவகிரககங்களுக்கு கோயில் அமைந்துள்ளது.(வேறு எங்காவது அமைந்திருந்தால் சொல்லுங்கள் கணக்கில் சேர்த்துக்கொள்கின்றேன்) முதலில் அமைந்த நவகிரககோயிலும் அதற்கான கல்வெட்டும் உங்கள் பார்வைக்கு..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-#லட்சதீபபெருவிழா சில நினைவுகள்-2

#திருக்கழுக்குன்றம்:-#லட்சதீபபெருவிழா சில நினைவுகள்-2

அகல்விளக்கு செய்த கலைஞர்:-
தீபம் ஏற்றுவதற்கான கரண்டி செய்யும் கலைஞர்:-
மின்அலங்காரம் வேலை நடைபெறுகின்றது:-
தீபத்திற்கான எண்ணை சேகரித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றது:-
பக்தர்களுக்கு கொடுப்பதற்கான பிரசாதபை தயார்செய்யப்படுகின்றது:-


#திருக்கழுக்குன்றம் லட்சதீப பெருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தது அனைவரும் அறிந்ததே.ஆனால் விழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு பின்னால் எவ்வளவு #கலைஞர்கள் #தொழில்நுட்பவல்லூனர்கள் பொதுமக்கள். அரசு அதிகாரிகள் பணிபுரிந்திருப்பார்கள். எவ்வளவு நாட்கள் இதற்காக வேலை செய்திருப்பார்கள். எவ்வளவு நாட்கள் இரவு தூக்கத்தினை இழந்திருப்பார்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்திருக்கின்றோம். அவர்கள் வேலைக்கான பணம் சாம்பதிப்பார்கள் என சொல்லலாம். பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துகொள்ளலாம்.ஆனால் #நமதுஊர்..#நமதுபெருமை என ஒவ்வொருவர் மனதிலும் நல்ல எண்ணம் இருந்ததால்தான் ;விழா இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்கான காரணம். #லட்சதீபவிழா மலர் வெளியிடுகின்றார்கள்.ஆனால் இதற்குபாடுபட்டவர்கள் புகைப்படங்கள் ஒன்றுமே இடம்பெறுவதில்லை...எனக்கு கிடைத்த புகைப்படங்கள் சிலவற்றை இணைத்துள்ளேன்.இனிவரும் காலங்களிலாவது #லட்சதீப பெருவிழாவில் இடம்பெறும் #கலைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை நாம் கவுரவப்படுத்தலாமே..நிர்வாகம் செய்யுமா?உங்களைப்போல நானும் காத்திருக்கின்றேன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-#தென்கயிலாயம் என வழங்கப்படும் திருக்கழுக்குன்றம்.

திருக்கழுக்குன்றம்:-#தென்கயிலாயம் என வழங்கப்படும் திருக்கழுக்குன்றம்.

கயிலாயம்:-
ஶ்ரீசைலம்:-
ஶ்ரீகாளாத்திரி:-
திருக்கழுக்குன்றம்:-



நந்திதேவர்:-



#சிவ பெருமான் திருநந்திதேவரை கயிலையிலிருந்து மூன்று சிகரங்களை பெயர்த்து அவைகளை #ஶ்ரீசைலம்.#ஶ்ரீகாளாஸ்திரி மற்றும் #திருக்கழுக்குன்றத்தில் வைக்க கட்டளையிட நந்திதேவர் அவ்வாறே செய்தார் என்பது புராணவரலாறு.அதுமுதல் நமது #திருக்கழுக்குன்றம் #தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகின்றது.
சிவாய நம..
தகவல்:-அந்தககவி வீரராகவர் நூலிலிருந்து.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-திரு.சுப்பையா சுவாமிகள் சில நினைவுகள்.

திருக்கழுக்குன்றம்:-திரு.சுப்பையா சுவாமிகள் சில நினைவுகள்.
திருநெ‌ல்வே‌லி அரு‌கி‌ல் உ‌ள்ள கடையனோடை எ‌ன்னு‌ம் ‌கிராம‌த்‌தி‌ல்‌வி‌ல்‌லிமு‌த்து‌க் கோனா‌ர்-நாராயணவடிவு த‌ம்ப‌தியரு‌க்கு 23.11.1908 ஆ‌ம் ஆ‌ண்டு‌பிற‌ந்தவ‌ர் மகா‌ன் சு‌ப்பையா சுவா‌மிக‌ள். ஒரே ஆ‌ண் வா‌ரிசான இவ‌ர், படி‌‌ப்‌பி‌ல்அ‌திக ஆர்வம் கொ‌ண்டவராகவும், அதே நேரத்தில் ஆன்மீக நாட்டமுடையவராகவும் இரு‌ந்தா‌ர். அ‌ப்போ‌து இரு‌ந்தே ந‌ண்ப‌ர்களுட‌ன் சே‌ர்‌ந்து பல கோ‌யி‌ல்க‌ள், சமா‌திகளை சு‌ற்‌றி வருவா‌ர்.ஐ‌ந்தா‌ம் வகு‌ப்பு வரை கடையனோடை‌யி‌ல் படி‌த்த இவ‌ர், இ‌ப்படி கோ‌யி‌ல், சமாத‌ி எ‌ன்று ‌சு‌ற்‌றி ‌தி‌ரி‌ந்ததா‌ல் அவரது பெ‌ற்றோ‌ர், மூ‌த்த மக‌‌ள் இரு‌க்கு‌ம் குலசேகரப‌ட்டின‌த்‌தி‌ற்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர். அ‌ங்கு‌ள்ள பெ‌‌ரிய ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌ந்தா‌ர். ஆனா‌ல் ‌அ‌ங்கு சு‌ப்பையா சுவா‌‌‌மி‌க்கு ந‌ண்ப‌ர்க‌ள் யாரு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை. வார ‌விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் அரு‌கி‌ல் உ‌ள்ள ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்று அ‌ங்கு‌ள்ள வ‌ள்‌ளி‌க்குகை, மூவ‌ர் சமா‌தி போ‌ன்ற இ‌ட‌ங்க‌ளி‌ல் த‌னிமை‌யி‌ல் அம‌‌ர்‌ந்து கொ‌ள்வா‌ர். அ‌ப்போது அ‌ங்கு வரு‌‌ம் சாது‌க்க‌ளுட‌ன் ‌சி‌த்த வை‌த்‌திய‌ம், யோக‌ம் போ‌ன்றவ‌ற்றை க‌ற்று‌‌க் கொ‌ண்டா‌ர். ‌பி‌ன்ன‌ர் மூ‌லிகை மரு‌ந்துக‌ள் தயா‌ரி‌த்து பலரு‌க்கு ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர். 7ஆ‌ம் வகு‌ப்பு வரை குலசேகர‌ப‌ட்டின‌த்த‌ி‌ல் படி‌த்த அவ‌ர், ம‌ீ‌ண்டு‌ம்கடையனோடை‌க்கு பெ‌ற்றோ‌ர்க‌ள் அழை‌த்து செ‌ன்றன‌ர். ‌பி‌ன்ன‌ர் ஆ‌ழ்வா‌ர்‌திருநக‌ரிலு‌ள்ள இ‌ந்து நடு‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌‌ல் 8ஆ‌ம் வகு‌ப்பும், ‌ திருவைகு‌ண்ட‌ம் காரனேஷ‌ன் உய‌ர் ‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு‌ம், பாளைய‌ங்கோ‌ட்டை தூய யோவா‌ன் க‌ல்லூ‌ரி‌யி‌ல் இ‌ண்ட‌ர்‌மீடிய‌ட் படி‌த்தா‌ர். இதையடு‌த்து மதுரை‌க்கு செ‌ன்று ‌பி.ஏ(hons) படி‌த்து முடி‌த்தா‌ர்.க‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ராக இரு‌ந்த க‌‌ல்யாண‌ம் ராமசா‌மி எ‌ன்பவருட‌ன் த‌ங்‌கி ‌சி‌த்துக‌ளிலு‌ம், மரு‌த்துவ‌த்‌திலு‌ம், ஆரா‌ய்‌ச்‌சி‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். மேலு‌ம் மூ‌லிகை, வை‌த்‌திய‌ம், உடற‌்கூறு, ‌சி‌த்து‌க‌ள், உற‌ங்காமை, உ‌ண்ணாமை போ‌ன்ற ப‌யி‌ற்‌சி பெ‌ற்றா‌ர். ஆனா‌ல் அத‌ி‌ல் நா‌ட்ட‌‌மி‌ல்லை.த‌ன் ‌நில‌ங்களை ‌வி‌ற்று ஏழை அ‌ன்னதான‌ம் வழ‌ங்‌கினா‌‌ர். ‌பி‌ன்ன‌ர் கணப‌திமூலம‌ந்‌திர‌ம், ஸ்ரீராம ஜெய‌ம் போ‌ன்ற ம‌ந்‌திர‌ங்களை பலரு‌க்கு உபதே‌சி‌த்தா‌ர்.மீ‌ண்டு‌ம் கு‌ற்றால‌ம், வ‌ள்‌ளி‌க் குகை, ‌திரு‌ச்செ‌ந்தூ‌ர் செ‌ன்றா‌ர். அதுவு‌ம் ச‌ரி‌ப்பட‌வி‌ல்லை. ‌‌பி‌ன்ன‌ர் ‌திரு‌‌ப்ப‌தி செ‌ன்றா‌ர். ‌பிறகு ‌விரு‌த்தாசல‌ம் செ‌ன்றா‌ர். அ‌ங்‌கிரு‌ந்து வடலூரை அடை‌ந்தா‌ர். அ‌ங்கு ‌சில மாத‌ங்க‌ள் த‌ங்‌கினா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்‌கிரு‌ந்து ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் வ‌ந்தடை‌ந்தா‌ர்.
சுப்பையா ஸ்வாமிகள் வசித்த குகை:-




சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடை‌சியாக‌ப்பே‌சியது திருக்கழு‌க் கு‌ன்ற மலை‌யிலம‌ர்‌ந்த ஓரா‌ண்டு வரைதா‌ன் (1951)
1951ஆ‌ம் ஆ‌ண்டு அ‌‌‌ங்கு வ‌ந்த சு‌ப்பையா சுவா‌மிக‌ள், அ‌ங்கு‌ள்ள மலை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து யோக ப‌யி‌ற்‌சி செ‌‌ய்வா‌ர். அ‌ப்போது அவரு‌க்கு பா‌ல், பழ‌ம் கொடு‌த்து உபச‌ரி‌த்தன‌ர். இர‌வி‌ல் ‌விஷ ஜ‌ந்து‌க்க‌ள், பு‌லி, ச‌ிறு‌த்தை எ‌ல்லா‌ம் நடமாடு‌ம் இ‌ட‌த்‌தி‌ல் எ‌ப்படி இரு‌க்‌கிற‌ீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டு‌ள்ளன‌ர். சுவா‌மி பு‌ன்முறுவலுட‌ன் இ‌ர‌ண்டொரு வா‌ர்‌த்ததை கூ‌றி அவ‌ர்களை அனு‌ப்‌பி வை‌த்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் மரண‌த்த‌ி‌ற்கு மூல‌ங்களை ந‌சி‌க்கு‌ம் உபாய‌த்துட‌ன் தவ‌ம் மே‌ற்கொ‌ண்டதா‌ல் பேசுவதை‌ந‌ிறு‌த்த‌ி‌‌க் கொ‌ண்டா‌ர். தன‌க்கு மு‌ன்பாக ‌திருவரு‌ட்பா எ‌ன்ற நூலை ம‌ட்டு‌ம் எ‌ப்போது‌ம் வை‌த்‌திரு‌ப்பா‌ர். ‌பி‌ன்ன‌ர் அ‌ங்கு‌ள்ள ம‌க்கள‌ா‌ல் கடையனோடை சுவா‌மி எ‌ன்று‌ம், ‌பி.ஏ. சுவா‌மி எ‌ன்று‌ம், ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி எ‌ன்று‌‌ம் அழை‌க்க‌‌ப்ப‌ட்டா‌ர்
சு‌ப்பையா சுவா‌மிக‌ள் கடையனோடை‌யி‌ல் அவதார‌ம் செ‌ய்தது முத‌ல் ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌த்த‌ி‌ல் மு‌க்‌தியடை‌ந்தது வரை அவரு‌க்கு இ‌வ்வுலக உய‌ி‌ர்க‌ள்,சடமா‌யிரு‌ந்த கோ‌யி‌ல்க‌ள், சமா‌திக‌ள் முத‌லியவ‌ற்றுட‌ன் ‌நிறைய‌த் தொட‌ர்புக‌ள் உ‌ண்டு. எ‌வ்வுயிரு‌க்கு‌ம் ‌தீ‌ங்கு ‌நினை‌க்காதவனே வை‌ஷ்ணவ‌ன் எ‌ன்ப‌ர். அ‌வ்வ‌ழி வ‌ந்தவ‌ர் எ‌வ்வு‌யிரு‌க்கு‌ம் எவராலு‌ம் ‌தீ‌ங்கு வர‌க்கூடாது என எ‌ண்ணுபவ‌ன் ச‌ன்மா‌ர்‌க்‌கி என வை‌ஷ்ணவ‌த்‌‌தி‌ல் இரு‌ந்து ச‌ம்மா‌ர்‌க்க‌ம் வரை அவ‌ர் வ‌ந்த பாதையை பா‌ர்க‌்கு‌ம் போது அவ‌ரி‌ன் உ‌யி‌ர் எ‌த்தகைய உறவை ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌நிலை நா‌ட்டி‌யிரு‌க்‌கிறது எ‌ன‌ப் பா‌ர்‌‌த்தா‌ல் தெ‌ளிவு ஏ‌ற்படு‌ம்.
1961 ம் ஆண்டு அவர் தன்னுடன் தொடர்புடைய அன்பர்களிடம் தனது உடலில்நாடி அடங்கும் நேரத்தை குறிப்பிட்டு இருந்தார்.அப்போது அவர் திருக்கழுக்குன்ற மலை குகையில் இருந்தார். நாடி அடங்கியவுடன் அவரது உடல் கீழே கொண்டுவரப்பட்டது. அவர் விருப்பப்படி சமாதி கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. மேலெ திறக்கும் வகையில் பலகைக் கல் வைத்து மூடப்பட்டது. 40 நாட்களுக்கு பூஜை செய்யப் பட்டது. பின்னர் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் சமாதியின் மூடி திறக்கப் பட்டது.
அவரது உடல் கெடாமல் அமர்ந்த நிலையில் அப்படியே இருக்கக் கண்டனர் மக்கள் அனைவருக்கும் ஆச்சரியம். THE BODY IS INTACT என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டது.சமாதியின் மேல் மூடி மூடப்பட்டது. மீண்டும் பத்து மாதங்களுக்கு பூசை செய்யப்பட்டது.அதன் பிறகு மீண்டும் சமாதியின் மூடி திறக்கப் பட்டது. உடல் கெடவில்லை. பின்னர் சமாதியின்மீது கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.
சுப்பையா ஸ்வாமிகள் இளமைகால புகைப்படம் :-
சமாதியில் தினசரி அன்னதானம் நடக்கிறது.தியான மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டு மலர் வெளியிடப்பட்டுள்ளது.

நமதுஊர்..நமதுபெருமை..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-போரில் சிதிலமடைந்த சிலை.

#திருக்கழுக்குன்றம்:-போரில் சிதிலமடைந்த சிலை.

 முகலாயர் படையெடுத்து அனைத்து கோயில்களையும் கொள்ளையடித்தனர்- பல கோயில்கள் இடித்தனர் என நாம் வரலாற்று பாடத்தில் படித்திருக்கின்றோம் முகலாயர் தாக்குதலில் நமது #திருக்கழுக்குன்றம் கோயிலும் தப்பவில்லை. அவர்கள் #பக்தவச்சலேசுவர் கோயில் நுழைவாயிலில் உள்ள #துவாரபாலகர் சிலையை இடிக்க துவங்கினர். அவ்வாறு அவர்கள் இடித்ததில் #துவாரபாலகர் சிலையின் கால் சேதமடைந்திருப்பதினை நீங்கள் கோயிலுக்கு செல்லும் சமயம் பார்க்கலாம். (புகைப்படத்தினை உங்கள் பார்வைக்கு இணணத்துள்ளேன்)





அப்போது அந்த முகலாய படைத்தளபதி #நடராஜர் சன்னதி முன் உள்ள சிற்பம் ஒன்றை கண்டு இடிப்பதை உடனே நிறுத்துமாறு தனது படைகளுக்கு கட்டளையிட்டுள்ளான்.

இந்த கோயிலில் நமது முன்னோர்கள் படை வீரராக உள்ளனர். எனவே கோயிலினை இடிக்க வேண்டாம் என முடிவெடுத்து திரும்பினர். முன்னதாக முகலாய படை யெடுப்புக்கு பயந்து அங்கங்கே கோயில் சிலைகளை சுரங்கங்களில் மறைத்து வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. நமது ஊரில் உள்ள சுரங்கத்தில் இருந்து எடுத்த சிலைகளும் அப்போது புதைத்து வைத்த சிலைகளாக இருக்கலாம் என்றும் துவரபாலகர் குறித்து தகவலும் செவிவழி செய்தியாக உள்ளது.
#துவரபாலகர் சிலை- முகலாய தளபதி கண்ட படை வீரர் சிலை -புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
சுரங்கம் பற்றிய முந்தைய பதிவினை காண :-https://www.facebook.com/groups/249272441772691/permalink/2490262771006969/

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்