திருக்கழுக்குன்றம்:-பட்சிதரிசனம் -தெரியாத தகவல்கள்.

திருக்கழுக்குன்றம்:-#பட்சிதரிசனம் -தெரியாத தகவல்கள்.

திருக்கழுக்குன்றம் பட்சி தரிசனம் பற்றி கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. மூன்று குடும்பத்தினர் வாரிசுகளுக்கு பட்சிக்கு உணவு ஊட்டும் பாக்கியம் கிடைத்துள்ளது.பட்சிக்கு உணவு கொடுக்கும் வீடியோவில் வருபவர் பெயர் திரு.ஜம்பு தேசிகர்.

அடுத்த குடும்பத்தினர் -சுந்தரமூர்த்தி தேசிகர் அவரின் தந்தை சுந்தர மூர்த்தி தேசிகர் -அவருக்கு தந்தை சண்முக தேசிகர்.


அடுத்த குடும்பத்தினர்- ராமலிங்க தேசிகர். அவரின் தந்தை சிவராம தேசிகர். அவருக்கு தந்தை வேதாசலம் தேசிகர்.
பெரும்பாலான படங்களில் திரு.ராமலிங்க தேசிகர் மற்றும் சுந்தர மூர்த்தி தேசிகர் படமே இடம்பெற்றிருக்கும். பட்சிக்கு உணவு கொடுப்பவர் தினமும் எழுந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி கழுகுகளுக்கு உணவு சமைப்பார்கள். சர்க்கரைப்பொங்கலுக்கு முக்காப்படி அரிசி.முக்காவீசம் வெல்லம்.கால்படி நெய்.பத்துபலம் முந்திரி சேர்த்து சமைப்பார்கள். தினமும் இதே அளவுதான். விடுமுறை நாட்களிலும்.கூட்டம் அதிகம் வரும் நாட்களிலும் இந்த அளவு மாறது. காலை 11 மணி அளவில் சமைத்த சர்க்கரைப்பொங்கலை பித்தளை தவலையில் எடுத்துகொண்டு மலைக்கு செல்வார்கள். அங்கு வேதகிரீஸ்வரரை வலம் வந்து பின் நேரே பட்சி பாறைக்கு சென்று அமர்வார்கள்.சர்க்கரை பொங்கலை வேதகிரீஸ்வரருக்கு படைப்பதில்லை. பட்சி பாறையானது ஒருவர் மட்டுமே அமர முடியும். பின்னர் தாம்பளத்தில் கிண்ணம் மூலம் ஒலி எழுப்புவர். பட்சி வட்டமிட ஆரம்பிக்கும். கூடியிருக்கும் மக்கள் பின்டிராப் சைலன்டில் இருப்பார்கள். வட்டமிட்ட கழுகு பின்னர் பாறையில் வந்து அமர்ந்து நடந்து வரும். தேசிகர் சர்க்கரை பொங்கலை ஒரு கிண்ணத்திலும் நெய் ஒரு கிண்ணத்திலும் வைத்திருப்பார். கையிலும் பொங்கலை வைத்திருப்பார். பொங்கலை கழுகு சாப்பிட்டுவிட்டு அலகால் நெய் கிண்ணத்தில் அலசியபின் பறந்து சென்றுவிடும். நிறைய நேரங்களில் இரண்டு கழுகுகளும் வரும் எப்போதாவது ஒரு கழுகு மட்டும் வரும். கழுகு சாப்பிட்ட மீதி பொங்கலை தவலையில் கலந்து பக்தர்களுக்கு வினியோகிப்பார்கள். சுமார் 60 வருடங்களுக்கு முன் கழுகு உணவு உண்டபின்னர் #பாங்கா என்கின்ற இசைக்கருவி மூலம் ஒலி எழுப்பப்படும். அதன்பின்னரே ஊரில் உள்ளவர்கள் உணவு உண்பர்.1991 ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு முன்னர் கழுகு வந்திருந்தது. அதன்பின்னர் வருவதில்லை. ஐந்து ஆண்டுகள் கழுகு வரும் என தேசிகர் மலை மீது சென்று காத்திருந்தார். இருப்பினும் கழுகு வரவேயில்லை. சென்ற கழுகுகள் மீண்டும் வர இறைவனை வேண்டுவோம்...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-தினம் தினம் தரிசனம்.

திருக்கழுக்குன்றம்:-தினம் தினம் தரிசனம்.


திருக்கழுக்குன்றம் பற்றி தினம் தினம் தரிசனம் நிகழ்ச்சியில் வெளிவந்துள்ள வீடியோ தொகுப்பு பகுதி -1 உங்கள் பார்வைக்கு..











https://www.youtube.com/watch?v=qJ2Y6GdbpAQ
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.

#திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல #டோலி.
#திருக்கழுக்குன்றத்தில் மறைந்துவிட்ட பொருளில் -நிகழ்வில் -#டோலியும் ஒன்று. அந்த காலத்தில் #வேதகிரீஸ்வரர் மலை மேல் செல்ல வயதானவர்கள்-மலை ஏற முடியாதவர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் #டோலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிய கட்டிலில் ( பாளை கயிறு மற்றும் ஜனப்பிரி கயிறில் கட்டப்பட்ட கட்டில்) ஆளை உட்கார வைத்து இரண்டு புறமும் கயிறினை கட்டி நீண்ட கொம்பினை அதில் நுழைத்து தோட்டில் போல் மலைமேலே இரண்டு நபர்கள் தூக்கி செல்வார்கள்.மாற்று ஏற்பாட்டுக்கு உடன் இரண்டு நபர்கள் செல்வார்கள். இதுபோல நிர்வாகத்தில் 10 டோலிகள் இருந்தது. சுமார் 20 பேருக்கு மேல் வேலை செய்து வந்தார்கள். டோலிக்கு கட்டணமாக நிர்வாகத்திற்கு 20 ரூபாயும் டோலி வாடகை 30 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. தூக்கி செல்லும் ஆட்களுக்கு தாலா 35 ரூபாய் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் அது மொத்தம் 200 ரூபாயாக மாறியது.ஒரு நபரை தூக்கி செல்பவர்கள் கீழே இருந்து(அடிவாரத்திலிருந்து) நேட்டு படி வரையிலும் சென்று விட்டுவிடுவர். அங்கிருந்து இருவர் அவர்களை மலைமேலே கொண்டு செல்வார்கள். வரும் தொகையை மொத்தமாக பங்கு போட்டுக்கொள்வார்கள்.1991 வரை இருந்த இந்த வசதி பின்னர் காணாமல் சென்று விட்டது.#நோபாள மன்னர் நமது #திருக்கழுக்குன்றம் மலைமேலே செல்ல டோலியை பயன்படுத்தினார். அவரை டோலியில் தூக்கிசெல்லும்காட்சிஇணைக்கப்பட்டுள்ளது.

பட்சி தரிசனத்திற்காக காத்திருக்கின்றார்கள்.
திருக்கழுக்குன்றத்தின் எழில் மிகு தோற்றம்.

இன்றைய இளைய தலைமுறையினர் இவ்வாறுதான் கொண்டுசென்றிருப்பார்கள் என புகைப்படம்மூலம்எளிதில்அறிந்துகொள்ளலாம்.
#நமதுஊர்..#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:- தேவஸ்தான வேலைக்கான சிபாரிசுக்கடிதம்.

திருக்கழுக்குன்றம்:- தேவஸ்தான வேலைக்கான சிபாரிசுக்கடிதம்.

பல வருடங்களுக்கு முன் #திருக்கழுக்குன்றம் தேவஸ்தானத்திற்கு தேவையான நபரை நியமிக்க அசிஸ்டண்ட் கலெக்டரிடம் குருக்களால் அனுப்பப்பட்ட சிபாரிசுக்கடிதம்..உங்கள் பார்வைக்கு...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-2005-ல் வெளிவந்த குமுதம் ஜோதிடம்.

#திருக்கழுக்குன்றம்:-2005-ல் வெளிவந்த குமுதம் ஜோதிடம்.








#திருக்கழுக்குன்றம் பற்றி 2005-ல் வந்த குமுதம் ஜோதிடம் புத்தகத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
புத்தகம் உங்கள் பார்வைக்கு.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-கோபுரவாசல் தரிசன விவரம்.

திருக்கழுக்குன்றம்:-கோபுரவாசல் தரிசன விவரம்.


#திருவிழா காலங்களில் #கோபுரவாசல் தரிசனம் #கோடி புண்ணியம் என சொல்லுவார்கள். #திருக்கழுக்குன்றத்தில் நடைபெறும் #சித்திரைத்திருவிழா காலங்களில் எந்த எந்த திருவிழா நாட்களில் எந்த கோபுரம் வழியாக ஸ்வாமிவீதிஉலாவரும்எனபதிவிட்டுள்ளேன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-வானவில்லின் வர்ணஜாலம்..



பல மாதங்களுக்கு முன்ஒரு மாலைநேரத்தில் எடுத்தது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-இரண்டுநாள் ;நடைபெற்ற புதியதேர் வெள்ளோட்டம்.

திருக்கழுக்குன்றம்:-இரண்டுநாள் ;நடைபெற்ற  புதியதேர் வெள்ளோட்டம்.















தேர் எரிந்தபிறகு திருவிழா சமயங்களில் அம்மன்தேரையே #ஸ்வாமி தேராக வைத்து வீதி உலா வந்தார்கள். பின்னர் புதியதாக #தேர் செய்து 28.06.2007 -வளர்பிறை திதியில் #வியாழக்கிழமை அன்று மாடவீதிகளில் வெள்ளோட்டம் விட்டார்கள்.ஊர் கூடி தேர் இழுந்தும் அதிக எடை காரணமாக தேர் பெரியதெருவில் பாதிதூரத்திற்கு பிறகு நகரவில்லை. சாலை சரியில்லாததால் நடுவிலேயே நின்று விட்டது.குறிப்பிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லை.மறுநாள் மனித சக்திகளை கொண்டும் இயந்திரங்கள் மூலமாகவும் தேர் நிலைவந்து சேர்ந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-இறைவன் கோலங்கள்.

திருக்கழுக்குன்றம்:-இறைவன் கோலங்கள்.


கடந்த 28.01.1991திங்கள்கிழமை அன்று திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது அப்போது வெளியிடப்பட்ட கும்பாபிஷேக மலரில்இந்தகோலங்கள்.பார்த்தேன்.அனைவரும் அறிந்துகொள்ள இதுபற்றி தெரிந்தவர்கள் யாராவது தங்கள் கருத்துக்களைபதிவுசெய்யலாம்.
நமதுஊர்..நமதுபெருமை..
வாழ்கவளமுடன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-திருவாவடுதுறை ஆதினம் சுப்பிரமணிய தேசிகர்.


திருக்கழுக்குன்றம்:-திருவாவடுதுறை ஆதினம் சுப்பிரமணிய தேசிகர்.

கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது திருவாவடுதுறை ஆதின மடம்.. இப்போது 24 வது ஆதினமாக திரு.அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் இருந்துவருகின்றார்.இந்த ஆதினத்தில் திருக்கழுக்குன்றத்தில் பிறந்த திரு.சுப்பிரமணிய தேசிகர் என்பவர் 18 வது ஆதினமாக (1920-1922) பதவி வகித்துள்ளார்.
இதுபற்றி ஆதினவரலாறு நூலில் தகவல் வந்துள்ளது. நமது ஊர் காரர் அவ்வளவு பெரிய பதவி வகித்தது நமக்கு எல்லாம் பெருமையல்லவா..
நமதுஊர்..நமதுபெருமை..
.வாழ்கவளமுடன்




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-யாழி(யாளி) சிற்பங்கள்.



திருக்கழுக்குன்றம்:-யாழி(யாளி) சிற்பங்கள்.
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்?
* யாழி தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சித்திரசிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள்அமைக்கபெற்றுள்ளது.
* சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.
* நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருப்பது போல் சிலைஅமைப்புகள் உள்ளன .
அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா ?
* இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.நமது #திருக்கழுக்குன்றம் கோயிலில் சோமஸ்கந்தர் ஆலய பக்கவாட்டுபடிக்கட்டுக்களிலும்.
                                      
சங்குதீர்த்த குளத்தின் நடுவே அமைந்துள்ள நீராழி மண்டபத்தில் அமைந்துள்ளன.நீராழி மண்டபத்தின் மேலே ஏற படிக்கட்டுக்கள் அமைந்துள்ளன.
அந்த நான்கு வழி படிக்கட்டுக்களின் இருபுறமும் இவ்வகை யாழிகள் அமைக்கப்பட்டுள்ளன. #திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள யாழிகள் படம் உங்கள் பார்வைக்கு..யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட .சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...தமிழரின் புராதன விலங்கு யா‌ழி அவை போற்றப்பட வேண்டும் மேலும் புகழப்பட்ட வேண்டும் தகவல்:-கூகுள்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்