திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.

 திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலை மீது இந்த நரிக்குளம் இருப்பது பெரும்பாலனருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான்கு வேதங்கள் அமைந்துள்ள மலைத்தொடரில் வேதகிரி மலைக்கும் அடுத்த மலைக்கும் நடுவில் இந்த குளம் அமைந்துள்ள இது நரிக்குளம் என அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய ருத்ர தீர்த்தம்(ருத்திரன்கோயில்) அளவிற்கு இது அமைந்துள்ளது. சுலபமாக யாரும் சென்று பார்க்க முடியாது. சுற்றிலும் தொரட்டு முள்களால் ஆன புதர்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரியபெரிய நீளமுடைய நல்லபாம்புகளும் விஷமுள்ள பாம்புகளும் சர்வசாதாரணமாக நடமாடுவதை காணலாம். அதனாலேயே பொதுமக்கள் அதிகம் அந்த குளத்தினை சென்று பார்ப்பதில்லை.மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி வழியும்.அந்த காலத்தில் மலைக்கோயில் கட்டும் சமயம் குடிநீருக்காக பட்சிதீர்த்தத்தையும் இதர தேவைகளுக்காக இந்த குளத்தினையும் பயன்படுத்தியிருக்கலாம். சுப்பையா ஸ்வாமிகள் குகைக்கு பின்புறம் சென்று இந்த நரிக்குளத்தினை பார்வையிடலாம். ஆனால் ஆபத்து நிறைந்த பயணமாகும் அது..
நரிக்குளத்தின் ஏரியல் வியூ உங்கள் பார்வைக்கு...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்

 திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்

மதுரை.திருவண்ணாமலை.சிதம்பரம் மற்றும் மைலாப்பூர் போன்ற தலங்களில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதுபோல திருக்கழுக்குன்றத்திலும் வருடத்தில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.சித்திரை மாதம் துவங்கி பங்குனி மாதம் வரை நடைபெறும் திருவிழாக்களின் விவரம் கீழே:-
சித்திரை மாதம் அமாவாசை திதி கழித்த ஐந்தாம்நாள் திருமலையில் கொடியேற்றி பிரம்மேற்சவ திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.இதில் 3ஆம் நாள் உற்வசமாக 63 நாயன்மார்கள் வேதகிரீஸ்வரர் மலையை கிரிவலம் வருவார்கள்.ஐந்தாம்நாள் ரிஷப வாகனத்தில் ஸ்வாமி உலா வருவார். ஏழாம்நாள் உற்வசவத்தில் ஸ்வாமி தேரில் மாடவீதி உலா வருவார். பத்தாம் நாள் உற்வசத்தில் இரவில் இராவண வாகனத்தில் ஸ்வாமி மலை வலம் வந்து மலையில் கொடி இறக்கப்படும்.அதன்பிறகு உற்சவருக்கு பத்துநாள் விடாற்றி உற்சவம் கோயிலுக்குள் நடைபெறும்.
மூல நட்சத்திரத்தில் திருஞான சம்பந்தருக்கு உற்சவம்.புனர்பூச நட்சரத்தில் அடிவார உற்சவம் ஆரம்பித்து விசாக நட்சரத்தில் நிறைவடையும். 10 நாள் திருக்கல்யாணம்.ரிஷப வாகன சேவை.(தற்போது இந்த திருக்கல்யாணம் நடைபெறுவது இல்லை)
மக நட்சத்திரத்தில் மாணிக்க வாசகர் ஸ்வாமிகள் உற்சவம். ஆனிமாதத்தில் மலை அடிவாரத்திலிருந்து திருப்படி விழாவும்

நடைபெறும்.நால்வர் பாடல்களை பாடியபடி அடியார்கள் மலைமீது படியேறுவார்கள்.இந்த உற்சவம் படி ஏற்றுவிழா என அழைக்கப்படுகின்றது.தற்போது பேச்சு வழக்கில் படிஉற்சவம்எனஅழைக்கப்படுகின்றது.முந்தைய காலத்தில் யானை மீது திருமுறைகள் வைத்து மலையை சுற்றி வந்துள்ளார்கள்.உத்திர நட்சரத்திரத்தில் நடராஜர் அபிஸேகம் நடைபெறும்.
ஆடிமாதம் தாழக்கோயிலில் உள்ள திரிபுரசுந்தரி அம்மனுக்கு பரணி நட்சத்திரத்தில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம் ஶ்ரீதிரிபுரசுந்தரிக்குமட்டும் உற்சவம் நடைபெறும்.அம்மன் கோயிலின் முன்உள்ள கொடிமரத்தில்கொடி ஏற்றப்படும்..பதினோறு நாள் உற்சவத்தில் அம்மன் விதவிதமான அலங்காரங்களில் விதவிதமான வாகனங்களில் பவனி வருவார். 11 ஆம் நாள் ஆடி உத்திரத்தன்று சர்வாங்க அபிஷேகம் -திருக்கல்யாணம்-பஞ்ச மூர்த்திகள் வீதி உற்சவம் நடைபெறும்.ஆடிப்பூர நட்சத்திரத்தன்று சுந்தரபெருமானுக்கு உற்சவம் நடைபெறும்.
ஆவணி மூல நட்சத்திரத்தன்று மலை மீது உள்ள சுவாமிக்கு விழா நடைபெறும் இறைவன் பிட்டுக்கு மண்சுமந்த படலம் நினைவாக நடைபெறும். இறைவன் ஆமை மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்யப்படும். தாழக்கோயிலில் சோமாஸ்கந்த மூர்த்தியே உற்சவ மூர்த்தியாவார் ஆவணி சதுர்த்தி திதியில் வினாயகர் உற்சவம் நடைபெறும். வினாயகர் வீதி உலா நடைபெறும்.

புரட்டாசி விழா மற்ற கோயில்களில் நடைபெறுவதுபோலவே மிக சிறப்பாக நடைபெறுகின்றது.பலவிதமான அலங்காரங்கள் அம்மனுக்கு செய்யப்படும். நவராத்திரி உற்சவம். 9 நாட்கள் அபிஷேக அலங்கார தூப தீப நைவேய்திய ஆராதனை.9 ஆம் நாள் நவமி அன்று மூலஸ்தான அம்மனுக்கு சர்வாங்க அபிஷேகம் நடைபெறும் விஜய தசமி அன்று அம்மன் நால்வர்கோயில் பேட்டை அருகே உள்ள வன்னியடி வினாயகர் கோயில் அருகே சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வது போன்று வன்னிமரத்தை வெட்டி விட்டு வருவார்.
ஶ்ரீமகா கந்த சஷ்டி உற்சவம் 6 நாட்கள் நடைபெறும்.ஆறு நாட்களும் தாழக்கோயில் முருகனுக்கு அபிஷேக ஆராதனை உற்சவம் நடைபெறும்.
ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரம் அன்று ஸ்வாமிக்கு அன்னபிஷேகம் திருமலையிலும் தாழக்கோயிலிலும் உருத்திரான்கோயிலிலும் நடைபெறும். .இறைவன் மீது சாற்றிய அன்னம் பிறகு பக்தர்களுக்கும் நீர்நிலைகளிலும் கரைக்கப்படும்.
கார்த்திகை பரணி தீபம் சிறப்பாக நடைபெறும்.பெளர்ணமியில் தீபேற்சவம்.பஞ்ச மூர்த்திகள் வீதி உலா..இரவு சொக்கபனை நிகழ்ச்சி நடைபெறும் கார்திகை மாதம் கடைசி சோமவாரம்(திங்கள்கிழமை) மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரருக்கு மதியம் 1 மணிக்கு மேல் 1008 மஹா சங்காபிஷேகம் நடைபெறும்.
ஶ்ரீ மாணிக்கவாசகர் 10 நாள் உற்சவம். கடைசி நாள் திருவாதிரையில் ஶ்ரீநடராஸ மூர்த்திக்கு மஹா அபிஷேகம்-வீதி உலா உற்சவம் நடைபெறும் மார்கழி திருவாதிரையாகிய ஆரூத்ரா தரிசனம் சிதம்பரத்தில் நடைபெறுவதுபோல இங்கு நடைபெறுவது விஷேஷமாகும்.

பூச நட்சத்திரத்தில் சங்கு தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். சந்திரசேகரர் அம்பாளுடன் சங்குதீர்த்த குளத்தினை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பார். மறுநாள் ரிஷப தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் அம்பாளுடன் வந்து குளத்தினை ஒன்பது முறை வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் தெப்பல் உற்சவம் நடைபெறும்.


மகம் நட்சத்திரத்தில் ஸ்வாமி சங்கு தீர்த்த்ததில் காலையில் தீர்த்தம். மாலையில் ரிஷப வாகன சேவை.

உத்திரம் நட்சத்திரத்தில் ஶ்ரீதிரிபுரசுந்தரி அம்மனுக்கு சர்வாங்க அபிஷேகம்.திருக்கல்யாணம். ரிஷப வாகன சேவை நடைபெறும்.
சிறப்பு அபிஷேகம்:-
ஆவணி அவிட்டம் முதல் கார்த்திகை மாத்திற்குள் திருமலையில் பவித்ரோற்சவம் வசதிக்கு ஏற்றபடி தோதான நாளில் செய்யப்படும்.
தாழக்கோயில் தினசரி காலை 6.00 மணிக்கு கோயில் திறந்து மதியம் 1.00 மணி வரையிலும் மாலை 4.00 மணிக்கு கோயில திறந்து இரவு 9.00 மணிக்கு நடை சாத்தப்படும். திருவிழா காலங்களில் உற்சவ காலங்களில் கோயில் திறக்கும் நேரம் மாறுபடும். மலைக்கோயில் காலை 8.30 க்கு திறந்து மதியம் 12.30 மணி வரையிலும் மாலை 4.30 மணிக்கு திறந்து இரவு 7.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்;.
புகைப்பட உதவி:-
Raaja Raajan
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.

சம்பு ஆதி என்னும் இரண்டு கழுகுகள் பாறையை அலகால் தீண்டி உருவானது சம்பு+ஆதி =சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சி தீர்த்தம் ஆகும். (அவர்கள் எதனால் அதை உருவாக்கினார்கள் என்கின்ற புராணகதை இன்னும் கிடைக்கவில்லை)


சுரகுரு என்கின்ற மன்னன் மஹாபலிபுரம் திரும்புகையில் குஷ்டமுள்ள வேட்டை நாய் ஒன்று தாகம் எடுத்ததால் வேதகிரிஸ்வரர் மலைமீது சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீர்அருந்தியது. அப்போது தவறி அது தீர்த்தத்தில் விழுந்ததால் அதன் குஷ்டம் நீங்கி புதுபொலிவுடன் திரும்பியது. இதனை கண்ட அரசரின் மந்திரி இரணிய சேதா என்னும் வெண்குஷ்ட நோயுடைய அரசரின் மந்திரி வேட்டை நாய்சென்ற திசையிலேயே வேதகிரீஸ்வரர் மலைமீது சென்று பார்த்தார். அங்கு சம்பாதி தீர்த்தத்தினை கண்டார். அந்த தீர்த்த்தில் நிறைய புழுக்கள் நிரம்பி இருப்பதாக இறைவன் காட்டியதால் மிகவும் அருவருப்புடன் வாயை கையால் மூடிக்கொண்டு அந்த நீரில் மூழ்கினான். மூழ்கிய நிலையில் அவன் உடலில் இருந்த வெண்குட்டம் நீங்கி வாய்மட்டும் குட்டம் நீங்காதிருந்தது.அந்த அமைச்சார் வாயை திறந்து நீரில் மூழ்கியும்.நீரை அருந்தியும் அவரின் குறை நீங்கவில்லை.வேதகிரீஸ்வரரின் திருவருளை சந்தேகிப்பவர் எந்த வித தவம் செய்தாலும் பலன் இல்லை என இச்செய்தி நமக்கு விளக்குகின்றது.இரணிய சேதா என்னும் அந்த மந்திரியின் பெயர் இந்த நிகழ்ச்சிக்குபிறகு முத்து வெள்வாயன் என மக்கள் அழைக்கலாயினர். சில வருடங்களுக்கு முன்னர் வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தினார்கள்.இந்த தீர்த்த நீரினை தலையில்தெளித்தால் நாம் செய்த பாவங்கள் தீரும்.

நமதுஊர்..நமதுபெருமை…

வாழ்கவளமுடன்

வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றி பட்டினத்தார் பாடல்...

 திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றி பட்டினத்தார் பாடல்...

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை பற்றி 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் பாடல் பாடி உள்ளார். மனிதர் இறக்கும் இடம் எதுவாக இருந்தாலும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருவடிகளே துணை என பாடியுள்ளார். இதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்றுள்ளது நமது திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் என தெரியவருகின்றது...

பாடல் -பாடலின் விளக்கம் மற்றும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்.உங்கள் பார்வைக்கு...

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-பட்சி தீர்த்தம் (அல்லது)சம்பாதி தீர்த்தம்.

 திருக்கழுக்குன்றம்:-பட்சி தீர்த்தம் (அல்லது)சம்பாதி தீர்த்தம்.


திருக்கழுக்குன்றம் தீர்த்தங்கள் வரிசையில் இன்று பட்சி தீர்த்தம் என்பதனை காணலாம். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைமீது இது அமைந்துள்ளது. பட்சிகள் உணவருந்தும் பாறையின் பின்புறம் இது அமைந்துள்ளது.40 அடி நீளம்.20 அடி அகலம். 40 அடி ஆழம் கொண்டது. 1.2 சென்ட் அளவு கொண்டது. சுமார் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. வான்மழை மற்றும் சுனைஊற்று நீரால் இது நிரம்புகின்றது.

இந்த தீர்த்தத்தின் விஷேஷம் என்னவென்றால் இதுவரை இது வற்றியதே இல்லை.இந்த தீர்த்தத்திற்கு சம்பாதி தீர்த்தம் என்கின்ற பெயரும் உண்டு. இதுபற்றிய புராணவரலாறு உள்ளது.அதனை அடுத்த பதிவில் காணலாம்....
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்