திருக்கழுக்குன்றம்:-சங்கு தீர்த்த குளம் அன்றும் இன்றும்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் கன்னிராசியில் பிரவேசிக்கும் லட்சதீபமும்;.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலிலே பிறக்கும் சங்கு இந்த குளத்தில் பிறப்பதும் விஷேம்.தமிழ்நாட்டில் உள்ள குளங்களிலே   இரண்டாவது  பெரிய குளம் (பரப்பளவு சுமார் 13 ஏக்கர் என பெயர் பெற்றது திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளம்.சஞ்சீவி மூலிகை கலந்த தண்ணீர் இந்த குளத்தில் கலப்பதால் இதில் ஒரு மண்டலம் காலையில் குளித்து மலையை சுற்றி வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நடைமுறை உண்மை. இவ்வளவு பெறுமை வாய்ந்த குளம் அதன் முழு கொள்ளளவு கொண்டு நிரம்பி உள்ளதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
இதன் நீர்வரத்து கால்வாய்களை சரியாக தூர் வாராமல் இருந்ததாலும் கால்வய்களை ஆக்கிரமத்து செய்ததாலும் இன்று குளம் வரண்டு காணப்படுகின்றது.கீழே உள்ள படங்களை பாருங்கள்.

வரண்ட குளத்தின் வீடியோ பதிவு கீழே:-

குளம் மீண்டும் பழைய நிலையை அடைவது எப்போது? அரசாங்கமும்.அதிகாரிகளும்.மக்களும் வரண்ட குளத்தினை இப்போதாவது தூர் வாரினால் நாமும் நமக்கு பின்னால் வரும் சந்ததியினரும் பயனைவார்கள்..செய்வார்களா...?                                         கேமரா உதவி :- ப்ரேம் 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 கருத்துகள்:

bhama anu சொன்னது…

nice
http://alltomysite.blogspot.com/

ஏர் முனை சொன்னது…

இந்த முயற்சியாவது எடுத்து எழுதிய உங்கள் நல்லேன்னத்துக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இன்டர்நெட்டில் எழுதினால் ஒன்றும் நடக்காது. இதுதொடர்பான சட்ட திட்டங்கள் தெரிந்து வழக்கு தொடருங்கள். இல்லையேல், இதுபோன்ற பணிகளை எடுத்துச் செய்யும் தன்னார்வக் குழுக்களோடு சேர்ந்து பணியில் இறங்குங்கள். மக்களைத் திரட்டுங்கள். மாற்றம் வரும்.

கருத்துரையிடுக