திருக்கழுக்குன்றம்:-சொக்கபனை வினாயகர்.

திருக்கழுக்குன்றம்:-சொக்கபனை வினாயகர்.
திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள பழமையான வினாயகர் கோயில்களில் இந்த சொக்கபனை வினாயகரும் ஒருவர்.
மலையிலிருந்து கீழிறங்கி அடிவாரம் வழியாக பெரியகோயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.சற்று உள்ளடங்கி உள்ளதால் சரியாக கவனித்தால்தான் கோயில் தெரியும். #கார்த்திகை மாதத்தில் வரும் #கார்த்திகை தீபமன்று பெரிய கோயில் சார்பாக இங்கு #சொக்கபனை ஏற்றுவார்கள்.
அதனாலேயே இந்த வினாயகருக்கு #சொக்கபனை வினாயகர் என பெயர் வந்தது.மற்ற கோயில்களில் வினாயகருக்கு முன் மூஞ்சுறு சிலைகள் இருக்கும். இதில் விஷேஷமாக #யானை சிலை உள்ளது.
மேலும் இந்த கோயிலில் #ராகு-கேது சிலைகள் ஒன்றாக அமைந்துள்ளது
இநத கோயிலின் விஷேஷமாகும். தமிழ்தாத்தா உ..வே.சாமிநாத அய்யர் திருக்கழுக்குன்றத்தில் தங்கியிருந்த சமயங்களில் தினமும் இந்த வினாயகரை தரிசிக்காமல் இருந்ததில்லை.இவ்வளவு பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம் தற்போது சிதிலமடைந்து உள்ளது. கோயிலினை சீரமைத்து பக்தர்கள் வந்து இறைவனை வழிபட வழிவகுத்தால் நன்றாக இருக்கும்.
நமதுஊர்..நமதுபெருமை...
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக