திருக்கழுக்குன்றம்:-1008 சங்காபிஷேகம் -சில தகவல்கள்.

 #திருக்கழுக்குன்றம்:-1008 சங்காபிஷேகம் -சில தகவல்கள்.





#திருக்கழுக்குன்றம் அருள்மிகு #வேதகிரீஸ்வரருக்கு 1008 மஹா சங்காபிஷேகம் 14.12.2020 திங்கள் கிழமை நடைபெற உள்ளது. #சங்காபிஷேகம் பற்றிய கூடுதல் தகவல்கள் உங்கள் பார்வைக்கு:-
14.12.2020 திங்கள் கிழமை காலை #சங்காபிஷேகத்திற்குண்டான அனைத்து சங்குகளும் சுத்தம் செய்யப்பட்டு ஒரு தட்டுக்கு 25 சங்குகள் வீதம் 40 தட்டுக்களில் அடுக்கி வைக்கப்படும். ஒவ்வொரு சங்குக்கும் பூஜை செய்து ரோஜா பூவினால் அலங்காரம் ;செய்யப்படும். சங்குகளுக்கான பூஜை காலை 9.00 முன்னரே ஆரம்பிக்கப்படும். 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட நீரினால் ஸ்வாமிக்கு மதியம் 12 மணிக்கு மேல் அபிஷேகம் ஆரம்பிக்கப்படும். #சங்கு தீர்த்தத்தில் பிறந்த சங்கினை பாதுகாப்பு காரணங்களுக்காக அபிஷேகத்தில் பயன்படுத்துவதில்லை. #சங்காபிஷேகத்தின்போது பொதுமக்கள் அனுமதி உண்டு. பொதுமக்கள் கண்டிப்பாக #முககவசம் அணிந்து வரவேண்டும. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கோயிலின் மூலவரை தரிசிக்க இடவசதி குறைவாக இருப்பதனால் கொஞ்சம் கொஞ்சம் பேராக உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். கோயில் நிர்வாகத்திற்கு நாம் ஒத்துழைத்தால் அ;னைவருக்கும் இறைவன் தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.#
அனைவரும் வருக..#இறைவன் அருள்பெருக..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக