வேலன்:-வாட்டர் பாக்கெட் வாங்க - விற்க -பயன்படுத்த தடை.

திருக்கழுக்குன்றத்தில் நடைபெற உள்ள இலட்ச தீப திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 25.07.2016 முதல் வாட்டர் பாக்கட்டுக்கள். மொத்தமாகவும்.சில்லறையாகவும் விற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.திருக்கழுக்குன்றததில் நடைபெற உள்ள புஷ்கரமேளா மற்றும் இலட்சதீப திருவிழாவிற்காக சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்கக்ப்படுகின்றது. அவர்களின் தேவைக்கு ஏற்ப சுத்தமான குடிநீரும் .சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீரும் வழங்கப்பட உள்ளது. வாட்டர் பாக்கெட் பயன்படுத்துவதால் ஒருவருக்கு இரண்டு பாக்கெட் வீதம் சுமார் 15 இலட்சம் வாட்டர் பாக்கெட் டின் பிளாஸ்டிக் குப்பை நகரத்தில் சேரும். அது மண்ணில் புதைந்து மீத்தேன் வாயு உருவாவதற்கும். மழை நீர் நிலத்தில் சேராமலும் தடுத்துவிடும். அதன் காரணமாக வாட்டர் பாக்கெட் இருப்பு வைப்பதற்கும். விற்பதற்கும். பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்படுகின்றது. மீறி யாராவது வாட்டர் பாக்கெட் விற்பதாக நீங்கள் அறிந்தால் சுகாதார ஆய்வாளர் அவர்களிடன் கீழ்கண்ட எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.செல்பேசி எண்:-
9965626599 
நமது ஊர் நமது பெருமை..அதனை காப்பது நமது கடமை..
வாழ்க வளமுடன்
வேலன். 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 கருத்துகள்:

Venkata krishnan.P.L. சொன்னது…

unmai

கருத்துரையிடுக