திருக்கழுக்குன்'றம் :-ஈஸ்வரன் உருவாக்கிய வேதகிரீஸ்வரர் மலை.






#திருக்கழுக்குன்றம்:-#ஈஸ்வரன் உருவாக்கிய நமது #திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரர் #மலை.
#திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரர் மலையை #பரமேஸ்வரன் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து #காஞ்சி#பெரியவர் அவர்கள் தமது #தெய்வத்தின்குரல்என்கின்ற புத்தகத்தின் #இரண்டாம் பாகத்தில் #வேதங்கள்அனந்தம் என்கின்ற தலைப்பில் நமது #திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரர் மலை உருவான விதம் குறித்து விவரித்துள்ளார். குறிப்பிட்ட அந்த பகுதி உங்கள் பார்வைக்கு:-
#பரத்வாஜ மஹரிஷி மூன்று ஆயுஸ் பரியந்தம் வேதாத்தியயனம் செய்தார். #பரமேச்வரன் அவருக்குப் பிரத்தியக்ஷமானார். “உமக்கு நாலாவது ஆயுஸ் கொடுக்கிறேன். அதைக் கொண்டு என்ன செய்வீர்?” என்று கேட்டார். பரத்வாஜர், ‘அந்த ஆயுஸை வைத்துக் கொண்டும் வேதாத்தியயனமே பண்ணிக்கொண்டிருப்பேன்’ என்று சொன்னார். எத்தனை ஆயுஸ் கிடைத்தாலும் வேதங்களைப் பூர்ணமாக அத்யயனம் பண்ணுவது ஸாத்தியமில்லையாதலால், இந்த அஸாத்ய விஷயத்தில் ரிஷி பிரயத்னப்படுவதைப் பார்த்து பரிதாபம் கொண்ட #பரமேச்வரன், அவர் மனஸை மாற்ற வேண்டும் என்று எண்ணினார். அங்கே மூன்று பெரிய மலைகளைத் தோன்றப் பண்ணி, ஒரு பிடி மண்ணை எடுத்துக் காட்டி, ‘நீ இவ்வளவு வருஷக் கணக்காக அத்யயனம் பண்ணின வேதங்கள் இந்தப் பிடி மண்ணுக்கு ஸமானம். நீ இன்னும் தெரிந்து கொள்ளாதவை இந்த மலைகளைப்போல் இருக்கின்றன’ என்று சொன்னார்.
#வேதகிரி என்னும் #திருக்கழுக்குன்றம் தான் இப்படி #வேதமேமலையான இடம் என்பார்கள். நான் அங்கே கிரி பிரதக்ஷிணம் பண்ணினபோது, கூட வந்தவர்கள் “தேவ தேவ தேவ மஹாதேவ” என்று பஜனை பண்ணினார்கள். நான் அதை “#வேதவேத#வேதமஹாவேத” என்று மாற்றிக் கொடுத்தேன்!
பரத்வாஜ ரிஷியின் இந்தக் கதை வேதத்திலேயே “காடக”த்தில் இருக்கிறது.
வருகின்ற 24.09.2018 #பௌர்ணமி அன்று நாமும் வேத வேத மஹாதேவ என இறைவனை நினைத்து வலம் வருவோம்..
#ஓம்நமச்சிவாய...
#நமதுஊர்...#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக