திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது.

 திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை இந்திரன் வழிபட்டது


இந்திரலோகத்தில் ஒருமுறை தேவ கன்னிகை ஒருவர் அழுது கொண்டிருந்தார் அவர் அழுகுரல் கேட்டு அங்கு வந்த இந்திரன் அழுவதற்கான காரணம் கேட்டார் அதற்கு அந்த தேவ கன்னிகை தம்மிடமிருந்த தங்க பந்தினை வாலிபர் ஒருவர் பறித்துக்கொண்டு கைலாயம் நோக்கி சென்றதாக குறிப்பிட்டார் தேவ மங்கை குறிப்பிட்ட பந்தை எடுக்க வேண்டி கைலாயம் சென்றார்.சிவபெருமான் அப்போது அந்த பந்து தமது அருகே இருக்குமாறு மாயை செய்து பார்வதிதேவியை  ஒரு கன்னியாகவும் தன்னை ஒரு வாலிபனாகவும் வடிவெடுத்து சூதாடுபவர்போல திருவிளையாடல் இயற்றினார். சிவபெருமான அருகே பந்து இருப்பதை கண்ட இந்திரன் அவர் பந்தினை கவர்ந்ததாக கருதி அவரைப்பலவாறு இகழந்து பந்தினை கேட்டான். சிவபெருமான் இந்திரன் கூறியதை கேளாதவர் போல் இருந்தார். இந்திரன் வெகுண்டு அவரை தன் வச்சிராயுதத்தினால் தாக்க கருதி வச்சிராயுதத்தினை ஓங்கினான். சிவபெருமான் இந்திரனை கடைக்கண்ணால் நோக்கினார். ஒங்கிய கையுடன் இந்திரன் கம்பம்போல் அசைவற்று நின்று விட்டார்.பிறகு சிவபெருமான் அருகில் இருந்த தோழியை அழைத்து விஷமுள்ள பாம்புகளால் இந்திரனை கட்டி பாதாள குகையில் அடைக்குமாறு கட்டளையிட்டார். இந்திரன் தான் செய்த தவறினை எண்ணி பாதாள சிறையில் வருந்திக்கொண்டிருந்தார். தேவகுரு தேவர்களுடன் இந்திரனை பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் கயிலை அடைந்தார். இந்திரன் செயல் மற்றும் இருக்கும்இடம் அறிந்து மிகவும் அஞ்சி தேவர்களுடன் சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து இந்திரனை மன்னிக்குமாறு வேண்டினான். சிவபெருமான இந்திரனை சிறை நீக்கி அழைத்துவர செய்தார். இந்திரன் சிவபெருமான் காலடியில் விழுந்து இப்பாவம் நீங்க அருளுமாறு கேட்டார். இப்பாவம் நீங்க திருக்கழுக்குன்றம் அடைந்து தவமிருக்குமாறு சொல்லினார். இந்திரன் திருக்கழுக்குன்றம் அடைந்து குளம் வெட்டி(இந்திர தீர்த்தம்) பூக்களாலும் -நன்னீராலும் இறைவனை பூஜைசெய்து அவரருள் பெற்று தன்பதம் அடைந்தார்.அதுமுதல் இது இந்திரபுரி என்றும் அழைக்கப்படுகின்றது. திருக்கழுக்குன்றத்தில் இந்திரன் பூஜித்தார்.தொடர்ந்து பூஜித்தும் வருகின்றார் என்பதற்கு அடையாளமாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுர கலசத்தருகே உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தினை சுற்றிப் பாய்ந்து விடுகின்றது. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை நடக்கின்றது.1889 ஆம் ஆண்டு.1901 ஆம் ஆண்டு மற்றும் 10.11.1930 ஆண்டும் நிகழ்ந்தது. இதுகுறித்தும் புலவர்கள் பாடியுள்ளனர்.இடிவிழுந்த மறுநாள் கோயில் நடை திறக்கையில் கருவறைக்குள் வெப்பம் பரவியுள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைப்படம்:-இரவில் கடுமையாக மழைபெய்த நேரத்தில் எடுக்கப்பட்டது.

நமதுஊர்..நமதுபெருமை..

வாழ்கவளமுடன்.

வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக