#திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....

 #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....








#பஞ்சபூதம் பெயர்க்காரணம் பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக பஞ்சலோகம் என்பது 5 உலோகங்களின் கலவை எனலாம். இது போல முக்கியமான 5 கூறுகளினை 5 பூதங்கள் அல்லது #பஞ்சபூதங்கள் என்பர். ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாகவும், ஏதேனும் ஒரு தன்மையினாலும் அல்லது இயற்கையான நிலவரத்தினாலும் இப்பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.
#நிலம், #நீர், #நெருப்பு, #காற்று, #ஆகாயம் ஆகியவற்றை #பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது.
பரம்பொருளாகிய இறைவன் இந்த #பஞ்சபூதங்களில் கலந்திருந்து நம்மை வழிநடத்துகிறார். ஆன்மிக ரீதியாக #பஞ்சபூதங்களுக்கும் திருத்தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவை:-
#சிதம்பரம் (ஆகாயம்)-ஆகாச லிங்கம்
#காளகஸ்தி (காற்று)-வாயு லிங்கம்.
#திருவண்ணாமலை (நெருப்பு)-அக்னி லிங்கம்
#திருவானைக்காவல் (நீர்)-ஜம்பு லிங்கம்
#காஞ்சீபுரம் (நிலம்)-பிருத்வி லிங்கம் ஆகும்.
நமது #திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலில் #பஞ்சபூததலங்கள் அமைந்துள்ளன.தனித் தனியாக ஒவ்வொரு ஊராக சென்று சிவனை தரிசனம் செய்ய இயலாதவர்கள் #திருக்கழுக்குன்றம் வந்து பஞ்ச பூத தலங்களை இங்கேயே தரிசிக்கலாம். #பஞ்சபூத தலங்களுக்கு செய்யப்படும் பரிகாரங்களை இங்கேயே முடித்துக்கொள்ளலாம்.#பஞ்சபூததலங்களில்
ஆகாயத்திற்குரிய #சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும், பழமையானதும் ஆகும். பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, #சிதம்பரத்தில் தொடங்கி #காளகஸ்தி, #திருவண்ணாமலை, #திருவானைக்காவல், #காஞ்சீபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்வது மரபு.இந்த வரிசைப்படி #திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச பூதங்களை தரிசிக்க வேண்டுமானால் வலமிருந்து இடமாக செல்லவேண்டும். அதன்படி முதலில் #நடராஜர்,#காளத்திஸ்வரர்.#அருணாசலேஸ்வரர்.#ஜம்புகேஸ்வரர் மற்றும் #ஏகாம்பரஸ்வரர் சன்னதிகள் அமைந்துள்ளது.இடமிருந்து வலமாக அமைக்காமல் வலமிருந்து இடமாக தரிசனம் செய்திடஎந்த காரணத்தினால் இந்த வரிசைப்படி நமது ஊரில் அமைத்தார்கள் என தெரியவில்லை. #பஞ்சபூத தலங்களுக்கும் சென்று தரிசிக்க முடியாதவர்கள் #திருக்கழுக்குன்றத்திலேயே இறைனை தரிசித்து இறைவன் அருள்பெருங்கள். #திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலில் அமைந்துள்ள #பஞ்சபூத தலங்களின் புகைப்படம் உங்கள் பார்வைக்கு... #நமதுஊர்..#நமதுபெருமை…
#வாழ்கவளமுடன்
#வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக