திருக்கழுக்குன்றம்:-அறிந்த சிலை அறியாத தகவல்-சிவ சூரிய மூர்த்தி-SivaSurya Murthi.

சிவ சூரிய மூர்த்தி:-

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் பத்தவச்சலேஸ்வரர் மற்றும் ரூத்ரகோடீஸ்வரர் கோயில்களில் நவகிரகங்கள் இல்லை. ஆனால் பத்தவச்சலேஸ்வரர் கோயிலில் சூரியனுக்கும் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சூரியன் சந்திரன் சிலைகளும் உள்ளது. பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் கருவறைக்கு எதிரில் மேற்குபுறம் பார்த்தவாறு வாசலுக்கு பக்கத்தில் சூரியன் சிலை அமைந்துள்ளது. இது சிவ சூரிய மூர்த்தி என அழைக்கப்படுகின்றது. இந்த சிலை பத்ர பீடத்தின் மீது நின்ற நிலையில் சுமார் 4 அடி உயரமுடையது. 220 வருடங்களுக்கு முன்னால் 18 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் .சிலையில் கணுக்கால் வரை ஆடை காட்டப்பட்டுள்ளது.கால்களில் காப்பு காணப்படுகின்றது. கடிபந்தம் உதரபந்தம் போன்றவை காணப்படுகின்றன.கீரிட மகுடம் காணப்படுகின்றது.இரு கரங்களிலும் தாமரை மலர் காணப்படுகின்றது.சன்ன வீரம் காட்டப்பட்டுள்ளது. முகத்தை சுற்றி ஒளிவட்டமும் இறைவனை சுற்றி திருவாச்சியும் உள்ளன.தைமாதம் வருகின்ற ரதசப்தமி அன்று சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றது.                                                            நமதுஊர்.நமதுபெருமை..                                                                                வாழ்கவளமுடன்                                                                                                           வேலன் @

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக