திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…

 திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…


ஹென்றி சால்ட் என்பவர் உலகில் "செயிண்ட் ஹெலினா, கேப், இந்தியா, இலங்கை, செங்கடல், அபிசீனியா மற்றும் எகிப்தில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். 1804 மற்றும் 1809 ஆம் ஆண்டு காலகட்டததில் ஹென்றி சால்ட் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். பாண்டிச்சேரியிலிருந்து மகாபலிபுரம் சென்ற போது #திருக்கழுக்குன்றம் வந்துள்ளார். அப்போது #திருக்கழுக்குன்றத்தில் உள்ள புனித மலையை பார்த்துள்ளார் பார்த்ததுடன் நில்லாமல் . இரண்டு முறையும் நமது ஊர் மலையையும் சங்கு தீர்த்த குளத்தினையும் வாட்டர்கலர் படமாக வரைந்துள்ளார் . அவர் #திருக்கழுக்குன்றம் பற்றி குறிப்பிடுகையில் “[தலைமை கடவுள் -வேதகிரீஸ்வரர்] மலையில் வசிக்கிறார், மலைமீது உள்ள கோயிலினை பார்க்கையில் அது ஒரு கோட்டையாகத் தோன்றுகிறது, உண்மையில் அணுகுவது மிகவும் கடினமாக இருக்கும், இது ஒரு அழகான அமைதியான பாதையை பாறையில் வெட்டவில்லை என்றால் மலைமீது போவது சிரமமாக இருந்திருக்கும். இந்த மலை கோகோ கொட்டைகள், மாம்பழங்கள் மற்றும் புளி மரங்களின் தோப்புகளால் சூழப்பட்டுள்ளது. "

நமதுஊர் மலைக்கோயிலையும் சங்குதீர்த்த குளத்தினையும் 5 வருட இடைவெளியில் வரைந்துள்ளார் ஏன் என தெரியவில்லை.இரண்டு முறையும் வரையப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு…
இணையதள முகவரி:- https://www.watercolourworld.org/search...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக