திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.

சம்பு ஆதி என்னும் இரண்டு கழுகுகள் பாறையை அலகால் தீண்டி உருவானது சம்பு+ஆதி =சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சி தீர்த்தம் ஆகும். (அவர்கள் எதனால் அதை உருவாக்கினார்கள் என்கின்ற புராணகதை இன்னும் கிடைக்கவில்லை)


சுரகுரு என்கின்ற மன்னன் மஹாபலிபுரம் திரும்புகையில் குஷ்டமுள்ள வேட்டை நாய் ஒன்று தாகம் எடுத்ததால் வேதகிரிஸ்வரர் மலைமீது சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீர்அருந்தியது. அப்போது தவறி அது தீர்த்தத்தில் விழுந்ததால் அதன் குஷ்டம் நீங்கி புதுபொலிவுடன் திரும்பியது. இதனை கண்ட அரசரின் மந்திரி இரணிய சேதா என்னும் வெண்குஷ்ட நோயுடைய அரசரின் மந்திரி வேட்டை நாய்சென்ற திசையிலேயே வேதகிரீஸ்வரர் மலைமீது சென்று பார்த்தார். அங்கு சம்பாதி தீர்த்தத்தினை கண்டார். அந்த தீர்த்த்தில் நிறைய புழுக்கள் நிரம்பி இருப்பதாக இறைவன் காட்டியதால் மிகவும் அருவருப்புடன் வாயை கையால் மூடிக்கொண்டு அந்த நீரில் மூழ்கினான். மூழ்கிய நிலையில் அவன் உடலில் இருந்த வெண்குட்டம் நீங்கி வாய்மட்டும் குட்டம் நீங்காதிருந்தது.அந்த அமைச்சார் வாயை திறந்து நீரில் மூழ்கியும்.நீரை அருந்தியும் அவரின் குறை நீங்கவில்லை.வேதகிரீஸ்வரரின் திருவருளை சந்தேகிப்பவர் எந்த வித தவம் செய்தாலும் பலன் இல்லை என இச்செய்தி நமக்கு விளக்குகின்றது.இரணிய சேதா என்னும் அந்த மந்திரியின் பெயர் இந்த நிகழ்ச்சிக்குபிறகு முத்து வெள்வாயன் என மக்கள் அழைக்கலாயினர். சில வருடங்களுக்கு முன்னர் வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தினார்கள்.இந்த தீர்த்த நீரினை தலையில்தெளித்தால் நாம் செய்த பாவங்கள் தீரும்.

நமதுஊர்..நமதுபெருமை…

வாழ்கவளமுடன்

வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக